கலாச்சாரம் பற்றி பேசும் பா.ரஞ்சித்தின் மனைவி கலாச்சார உடை புகைப்படம்.. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?

அழுத்தமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து வித்தியாசமாக கொடுத்து வரும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில், காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாக நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அரசியல் மற்றும் காதலை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தில் பா. ரஞ்சித் கலாசாரத்தைப் பற்றி அழுத்தமாக பேசியிருந்தார். இந்நிலையில் கலாச்சாரம் பற்றி பேசும் பா. ரஞ்சித்தின் மனைவி கலாச்சார உடையில் உள்ளதை பார்த்து பலரும் விமர்சித்து வருகின்றனர். ஊருக்கு மட்டும் தான் பா. ரஞ்சித் உபதேசம் பேசுவார். அது எல்லாரும் பேசுபவர்களுக்கு இல்லை எனக் கூறி வருகின்றனர்.

சமீபத்தில் பா. ரஞ்சித்தன்னுடைய மனைவி உடன் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில், அவருடைய மனைவி பனியன் மட்டும் அணிந்தபடி கவர்ச்சி தூக்கலான உடையில் இருந்திருக்கிறார். ஊருக்கு உபதேசம் சொல்லும் பா ரஞ்சித் இப்போது அவர் பேசிய கலாச்சாரம் எங்கே போவது என இந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

pa-ranjith-with-his-wife-cinemapettai
pa-ranjith-with-his-wife-cinemapettai

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தில் பா. ரஞ்சித் மனைவி அனிதாவிற்கும் பங்குண்டு. ஏனென்றால் அவர் இப்படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். வாய்ப்பளித்த கணவருக்கு நன்றி என்றும் ட்விட்டர் பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

லவ் பிரேக்கப், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் போன்ற விஷயங்களை நட்சத்திரம் நகருகிறது படத்தின் மூலம் பேசி சமுதாயத்திற்கு உபதேசம் சொன்ன பா. ரஞ்சித் பொது இடத்தில் மனைவியை கலாச்சார உடையில் இருக்க சொல்லியிருக்கலாமே என்றும் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து கருத்து தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் சினிமாவில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயம் அல்ல. இதை விட குறைவாக போட நினைப்பார்கள் ஒளிந்து, கலாச்சாரத்திற்காக தங்களை மாற்றிக் கொள்ள யாரும் இங்கு தயாராக இல்லை. ஆனால் படத்தில் மட்டும் பக்கம் பக்கமாக வசனத்தை வைப்பார்கள்.