பிரஷாந்த் ஹீரோயினுக்கு இப்படி ஒரு நிலைமையா? குழந்தைக்காக அவர் எடுத்த அதிரடி முடிவு

பாலிவுட் நடிகை இஷா கோபிகர் பிரஷாந்துடன் இணைந்து, காதல் கவிதை படத்தில் நடித்தது மூலம் தமிழில் பிரபலமானார். இவர் கடந்த 2009ம் ஆண்டு தொழில் அதிபர் டிம்மி நரங்கை காதலித்து கரம் பிடித்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். 14 ஆண்டுகள் கழித்து இஷா கோபிகரும், டிம்மி நரங்கும் பிரிந்துவிட்டார்கள். இனியும் சேர்ந்து வாழ முடியாது என முடிவு செய்து விவாகரத்து கோரி மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.

விவாகரத்து செய்தி ஒரு பேசும்பொருளாக அப்போது மாறி இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஷாவுக்கும், டிம்மிக்கும் விவாகரத்து கிடைத்தது. விவாகரத்து கிடைத்ததை முதலில் உறுதி செய்தது டிம்மி நரங் தான். தற்போது, மகள் ரியானாவுடன் தனியாக வசித்து வருகிறார் இஷா.

எனக்கு ரொம்ப பயமா இருந்தது.. ஆனா!

தற்போது, தனது விவகாரத்தை பற்றி அவர் வெளிப்படையாக சில விஷயங்களை கூறியுள்ளார். அதில், “,முதலில் பயமாக இருந்தது. மறுபடியும் முதலில் இருந்து எப்படி துவங்குவது என்று எனக்கு தெரியவில்லை. என் 10 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன். “

“என் மகள் நல்ல வசதியுடன் வாழ்ந்தவர். அவர் எப்படி சாதாரணமான சூழ்நிலைக்கு அடாப்ட் ஆவார் என்ற பயமும் இருந்தது. அதுமட்டுமின்றி, அப்பா இல்லை என்ற ஏக்கம் அவருக்கு வந்துவிட கூடாது என்றும் நினைத்ததேன். அதனால், டிம்மி நரங்கின் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கினேன்.”

“நாங்கள் கணவன், மனைவி இல்லை ஆனால் எங்கள் மகளுக்கு பெற்றோர். அது என்றும் மாறாது. நானும், டிம்மியும் தற்போது நண்பர்களாக இருக்கிறோம். எனக்கு வற்புறுத்தி யாருடனும் இருக்க பிடிக்காது. அவர் விவாகரத்து வேண்டும் என்றார்.. நான் கொடுத்தேன். வாழு, வாழ விடு என நினைப்பவள் நான். நான் நினைத்திருந்தால் விவாகரத்து கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அது என் குணம் இல்லை. நாங்கள் மனமொத்து பிரிந்தோம்” என்றார்.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள், இவருக்கு இந்த நிலைமையா.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment