தோழியாகவே நடித்து வரும் 5 ஹீரோயின் மெட்டீரியல்கள்.. ஒரு வழியா ரஜினி மாட்டுப்பொண்ணுக்கு வந்த அதிர்ஷ்டம்

சப்போர்ட்டிங் ரோல், ஹீரோயின் தோழி என்று 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அந்த கதாபாத்திரத்துக்கே பழகிப்போனவர்கள் இந்த 5 நடிகைகள். இதுவரை யாரும் இவர்களுக்கு ஹீரோயின் அந்தஸ்து கொடுக்கவே இல்லை. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் இதே வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சஞ்சனா செட்டி: ஹீரோயின் ரேஞ்சுக்கு அழகாக இருந்தாலும் இவருக்கு இன்னும் மெயின் ரோல் கிடைக்கவில்லை. இவர் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக வருவார். சிம்புவின் வாலு, பட்டாளம், போன்ற படங்களிலும், என்றென்றும் புன்னகை படத்தில் திரிஷா தங்கச்சி போன்ற கதாபாத்திரங்கள் பண்ணியிருக்கிறார்.

மாளவிகா மேனன்: இவன் வேறு மாதிரி படத்தில் ஹீரோயினுக்கு தங்கச்சியாக வருபவர். பார்ப்பதற்கு க்யூட்டாக இருந்தாலும் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு இன்னும் வரவில்லை.30க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின் தோழியாகவே நடித்து வருகிறார்.

ரேவதி: தனுஷின் தங்க மகன் படத்தில் எமி ஜாக்சனுக்கு தோழியாக வருபவர் தான் இவர். ஒரு சில காட்சிகளில் எமி ஜாக்சனை விடவும் அழகாக இருப்பார். ஆனால் இவருக்கு இன்றுவரை பட ஹீரோயின் வாய்ப்பு வந்ததில்லை. 20-க்கும் மேற்பட்ட படங்களில் சப்போர்ட்டிங் தோழியாகவே நடித்து வருகிறார்.

மிர்னா மேனன்: யார் இந்த பொண்ணு என முதல் படத்திலேயே பிரமிக்க வைத்தவர் தான் மிர்னா மேனன். ரஜினியின் ஜெயிலர் படத்தில் அவருக்கு மருமகளாக நடித்திருப்பார். இப்பொழுது லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறாராம்.

தான்யா பாலகிருஷ்ணன்: ராஜா ராணி, நீதானே என் பொன்வசந்தம், ஏழாம் அறிவு போன்ற படங்களில் நடித்திருப்பார். ராஜா ராணி படத்தில் மொபைல் போனில் ஹீரோ ஜெய்யிடம் அன்பு செய்யும் கதாபாத்திரம் செய்தவர் தான் இந்த தான்யா.