Rajinikanth: போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என்ற கதை தான் நடிகர் ரஜினிகாந்தின் கடந்த சில வருட சினிமா பயணம்.
தலைவரை திரையில் பார்த்தால் மட்டுமே போதும் என்றொரு கூட்டமும், வயசாகிடுச்சு, ரெஸ்ட் எடுக்க வேண்டி தானே என இன்னொரு கூட்டமும் பேசி வருகிறது.
இப்படி பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக இன்னொரு விஷயமும் நடந்து இருக்கிறது.
கொந்தளிக்கும் இணையவாசிகள்
ரஜினிகாந்திற்கு கூலி தான் கடைசி படம் என சொல்லப்பட்டது. அதன் பின்னாலேயே லிஸ்டில் ஒட்டி கொண்டது ஜெயிலர் 2.
சமீபத்தில் அவருடைய மனைவி ஜெயிலருக்கு பிறகும் ரஜினி நடிப்பார் என சொல்லியிருக்கிறார். இப்படி ஒரு நேரத்தில் தான் ரஜினி கூலி படத்திற்காக மொத்தம் 70 நாட்கள் கால்சீட் கொடுத்திருப்பதாகவும் அதில் 45 நாட்களுக்கு அவருடைய டூப் தான் நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது.
போதாத குறைக்கு எந்திரன் படத்தில் ரஜினிக்கு மனோஜ் டூப் போட்ட காட்சிகள், கோச்சடையானில் யுவராஜ் டூப் போட்ட காட்சிகளை வைரலாக்கி வருகிறார்கள்.
இதில் எந்த அளவுக்கு உண்மை நிலவரம் இருக்கிறதென்று தெரியவில்லை. ரஜினியால் முடியாத போதும் அவருடைய குடும்பத்தினர் தான் அவரை வற்புறுத்தி நடிக்க வைக்கிறார்கள் என ஒரு சில வருடங்களாகவே குற்றம் சாட்டப்படுகிறது.
30 நாட்களுக்கும் குறைவாக நடிக்கவும் ஒரு நடிகருக்கு எதற்காக 200 கோடி சம்பளம் என்றெல்லாம் கேள்வி எழுகிறது. கூலி படத்தில் ரஜினிக்கு டூப் போட்டு நடிக்க வைக்கிறார்கள் என்ற செய்திக்கு இனி கூலி படக்குழு தான் விளக்கமளிக்க வேண்டும்.