74 வயதிலும் நின்னு பேசும் ரஜினிகாந்த்.. கூலிக்கு பின் நடக்க போகும் தரமான சம்பவம்!

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 74 வயதிலும் ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் வியந்து பார்க்கும் அளவுக்கு சம்பவம் செய்து வருகிறார். இன்றுவரை ரஜினி திரையில் வந்து ஸ்டைலாக டயலாக் பேசினாலே போதும் என தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் அவருக்கு இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் 600 கோடி வசூல் செய்து, என்னைக்கும் ராஜா நான் தான் என்பதை உறுதிப்படுத்தினார். தற்போது அதையும் தாண்டிய வசூலை நோக்கி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

தரமான சம்பவம்!

படத்தின் மீதான அதீத எதிர்பார்ப்புக்கு காரணம் ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணி தான். ஏற்கனவே இந்த படம் வெளிநாட்டு வியாபாரத்தில் இந்திய அளவில் நம்பர் 2 இடத்தில் இருக்கிறது என்பது நமக்கு தெரியும்.

ரிலீசுக்கு முன்பே பெரிய அளவில் பிசினஸ் செய்து கொண்டிருப்பதால் இன்னும் ஒரு மாதத்தில் இப்போது இருக்கும் தரவுகளில் இருந்து இரண்டு மூன்று மடங்கு அதிகமாகத்தான் எல்லா வசூலும் இருக்கப் போகிறது.

இதனால் கண்டிப்பாக கூலி பட ரிலீஸ் க்கு பிறகு ரஜினிகாந்த் தன்னுடைய சம்பளத்தை உயர்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வயதிலும் வசூலில் நின்னு பேச முடியும் என்றால் அது ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே சாத்தியம்.