1. Home
  2. சினிமா செய்திகள்

Rasavathi Trailer: சண்டையில் சாவுறது தான் வீரம்ன்னு சொல்லி இருக்காங்க! அர்ஜுன் தாஸ் ரசவாதி ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

Rasavathi Trailer: சண்டையில் சாவுறது தான் வீரம்ன்னு சொல்லி இருக்காங்க! அர்ஜுன் தாஸ் ரசவாதி ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

ரகுவரன் போன்ற குரலும், தோற்றமும் இருப்பதாலேயே அர்ஜுன் தாஸ் ரசிகர்கள் மனதில் சீக்கிரம் இடம் பிடித்து விட்டார். அதை தொடர்ந்து அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ரசவாதி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது இதில் அர்ஜுன் தாஸ் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், வி.ஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசவாதி ட்ரெய்லர்

ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியாகி இருக்கும் இந்த ட்ரைலர் இப்போது கவனம் பெற்றுள்ளது. இதன் ஆரம்பத்திலேயே என்ன பெரியவரே எத்தனை தலைமுறையா எங்கள பாத்துகிட்டு இருக்கீங்க என்ற வசனத்தோடு தொடங்குகிறது.

அதை அடுத்து பின்னணி இசையுடன் கூடிய விறுவிறுப்பான காட்சிகள் காட்டப்படுகிறது. அதன் முடிவில் பயமில்லாம நடிக்கிறது தான் வீரம்னு சொல்லிக் கொடுத்திருக்காங்களா?

எங்க வீட்ல சண்டையில சாவுறது தான் வீரம்னு சொல்லி கொடுத்திருக்காங்க என்ற வசனத்தோடு வீடியோ முடிகிறது. மௌனகுரு, மகாமுனி போன்ற படங்களின் மூலம் ரசிக்க வைத்த சாந்தகுமார் தற்போது ரசவாதி மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.