மண்டமேல இருக்க கொண்டையை மறந்த ராஷ்மிகா.. வெட்ட வெளிச்சமாய் சிக்கிய ஸ்ரீவள்ளி

1000 கோடி வசூல் படங்களில் கொடி கட்டி பறந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிக்க வந்த கொஞ்ச காலத்திலேயே ஏகப்பட்ட வருமானம். தனுஷ் மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் வெளிவரவிருக்கும் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் சல்மான் கான் உடன் சிக்கந்தர் படத்திலும் நடித்து வருகிறார்.

அசால்டாக இவர் நடித்த 2 படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. அனிமல், புஷ்பா 2 போன்ற படங்கள் இவரை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது. இதனால் பாலிவுட், பக்கம் இவரது காற்று பலமாக வீசுகிறது. அது மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் இவருக்கு கொட்டிக் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள்.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ராஷ்மிகா விஜய் தேவர் கொண்டவுடன், ஜோடி போட்டார். அதன் பின் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இப்பொழுது டேட்டிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் வெளிப்படையாக அதை ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் நடித்த குபேரா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தன்னை அறியாமலேயே இவர்களது ரிலேஷன்ஷிப்பை பற்றி உளறி விட்டார் ராஷ்மிகா.

விஜய் தேவர்கொண்டாவிடம், நீங்கள் எதை எடுத்துக் கொள்வீர்கள் என்று அவரிடம் கேட்க, அப்படியே எல்லாத்தையும் எடுத்துக் கொள்வேன் என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

இதைத்தாண்டியும் இருவரும் ஒன்றாக, ஒரே காரில் மும்பை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியது இவர்களது ரிலேஷன்ஷிப்பை மேலும் உறுதிப்படுத்தியது. அது மட்டும் இன்றி ஒரு முக்கியமான ஆன்மீக தளத்திற்கு இருவரும் ஜோடியாக சென்றதும் வெட்ட வெளிச்சமானது. இதனால் கூடிய விரைவில் வீட்டில் டும் டும் டும் ஏற்பாடு கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →