பணத்தேவைக்காக அடுத்தடுத்து ரவி மோகன் எடுக்கும் விபரீத முடிவு.. குடும்பத்தையே முகம் சுளிக்க வைத்த குருவன்

சினிமா குடும்ப வாரிசான ரவி மோகன் இன்று “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். சிவகார்த்திகேயன், கார்த்தி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் போன்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் ரவி மோகன். அடுத்து யோகி பாபுவை வைத்து நகைச்சுவை படம் ஒன்றை இயக்கப்போவதாகவும் திட்டம் போட்டுள்ளார். இந்த விழாவில், ஜெயம் ரவியுடன் அவரது புது காதலி கென்னிஷா உடனிருந்தார். முன்னதாக இவர்கள் இருவரும் ஜோடியாக திருப்பதி சென்று வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா கலந்து கொண்டார். சமீப காலமாக ஜெயம் ரவிக்கு பண தேவைகள் அதிகமாக இருந்து வருகிறது. அதனால் சினிமாவில் எந்த கதாபாத்திரம் வேண்டுமானாலும் நடிக்க தயார் என வில்லன் அவதாரம் எடுத்து வருகிறார்.

விஜய் சேதுபதி போல் இப்பொழுது புது படங்களுக்கு வில்லனாக நடிக்க பெரும்பாலும் ஜெயம் ரவி ஆசைப்படுகிறாராம். ஒரு படத்திற்கு நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதற்கு 15 கோடிகள் சம்பளம் கேட்கிறாராம். தற்போது பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இதுபோக லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் படம் பென்ஸ். இதில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கும் வில்லனாக ஜெயம் ரவி இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே பைனான்சியர் மதுரை அன்புச் செழியனிடம் பெரும் தொகையை கடனாக வாங்கியுள்ளார் ரவி மோகன்.

இப்பொழுது ஜெயம் ரவி சார்பில் நிறைய பைனான்ஸ் செய்யும் கந்துவட்டிக்காரர்களிடம் சிறு சிறு தொகையாக கடன் வாங்கப்படுகிறதாம். சமீபத்தில் இதெல்லாம் அவரது குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அப்சட்டில் இருக்கிறார்களாம். ரவி மோகன் என்றாலே முகத்தை சுளித்து கொள்கிறார்களாம்.