ஜெனிஷா என் வாழ்க்கை துணை.. ரவி மோகன் அதிரடி

Ravi mohan : ரவி மோகன் ஆர்த்தியின் விவாகரத்து அறிக்கையின் போது கெனிஷா உடன் கிசுகிசுக்கப்பட்டார். அப்போது இந்த உறவை ரவி மோகன் மறுத்து வந்த நிலையில் சமீபத்தில் ஐசரி திருமண விழாவில் கெனிஷாவுடன் வந்திருந்தார்.

இது குறித்து இணையத்தில் பேசுபொருள் ஆகிய நிலையில் கெனிஷா உடனான உறவை உறுதிப்படுத்தி இருக்கிறார் ரவி. அதாவது எதுவுமே இல்லாமல் தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போது எனக்காக நின்றவர் தான் கெனிஷா.

அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த அழகான துணை. பல போராட்டங்களை என் வாழ்வில் சந்தித்தபோது கெனிஷா என்னுடன் உறுதுணையாக நின்றார். இருளில் இருந்த எனக்கு ஒளியை காண்பித்தார். எனக்கும் என் பெற்றோர்களும் கெனிஷா செய்தது மரியாதைக்குரிய விஷயம்.

கெனிஷா குறித்து பதிவிட்டுள்ள ரவி மோகன்

கெனிஷா தெரபிஸ்ட் என்பதை காட்டிலும் நல்ல பாடகி. கெனிஷாவிடம் என் கதையை ஆரம்பத்தில் கூறிய போது கேட்ட சில நிமிடத்திலேயே தெரபிஸ்ட் ஆக இல்லாமல் தோழியாக தனக்கு உதவினார்.

நான் துன்பத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்தார். அவரைப் பற்றி பல அவதூறான விஷயங்கள் பரவி வருகிறது. உண்மை எதுவென்று எனக்குத் தெரியும். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு என்னுடைய நன்றி உணர்வை பற்றி நன்றாகவே தெரியும்.

மேலும் நீங்கள் என்னை மதிக்கிறீர்கள் என்றால் அதையே கெனிஷாவுக்கும் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நான் என்ன செய்கிறேன் என்பதை நன்றாக தெரிந்து தான் செய்கிறேன் என்று ஜெயம் ரவி பதிவிட்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →