ப்ளூ சட்டை மாறனுக்கு ஐஸ் பெட்டியை தலையில் வைத்த பிரபலம்.. ரெட்ரோ தோல்விக்கு யார் காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாதி படங்கள் விமர்சனங்கள் மூலமாகவே பார்க்கப்பட்டு ரசிகர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை என்ற விவாதம் விஜய் டிவி நடத்திய நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

அதில் காசு வாங்கிக்கொண்டு விமர்சனங்கள் செய்வது மிகப்பெரிய தவறு, படம் நல்லா இருக்கா? இல்லையா? என்பதை ரசிகர்கள் தான் கூற வேண்டும் இடையில் தரகர் மாதிரி சொல்றதுக்கு நீங்க யாரு என்பது போன்ற கடும் வாக்குவாதம் நடந்தது.

முக்கியமாக ரெட்ரோ, குட் பேட் அக்லி இந்த வாரம் வெளிவந்த Thuglife வரை விமர்சனங்களால் சுக்குநூறுக்காக நொறுக்கப்பட்டது. 50 சதவீத ரசிகர்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு ஒருவேளை படம் நல்லா இல்லை என்றால் OTT-யில் பார்த்து விடலாம் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர்.

இதனால் பெரிய பட்ஜெட் படங்கள் வசூலில் மரண அடி வாங்குகிறது. இது பாதி ஓடிடி நிறுவனங்களின் சூதானமான ஆட்டமாக கூட இருக்கலாம். இது ஒரு புறம் இருக்க தன்னுடைய பங்குக்கு தனஞ்ஜெயன் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். எல்லாருமே காசு வாங்கிட்டு தான் விமர்சனம் செய்யறாங்க அதனாலதான் ரெட்ரோ போன்ற படங்கள் ஓடவில்லை.

காசு வாங்காம ரிவ்யூ பண்றது ப்ளூ சட்டை மாறன் மட்டும் தான் என்பது போன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். இது எந்த அளவுக்கு உண்மை என்பது கோலிவுட் வட்டாரத்துக்கே தெரியும். இதே தயாரிப்பாளர் தான் கங்குவா 1000 கோடி வசூல் செய்யும் என்று அடித்துக் கூறினார்.

தற்போது ரெட்ரோ 235 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது, போட்ட காச மொத்தமா எடுத்தாலும் கூட இது எந்த வித லாபமும் இல்லை என்பது தான் உண்மை. நம்ம மக்கள் தெளிவா இருக்காங்க கேங்ஸ்டர் கதைகளை ஒதுக்கி, நல்ல ஃபீல் குட் மூவியாக இருந்தால் ரசிக்கிறாங்க கைத்தட்டுறாங்க பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்குறாங்க.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →