நடிகை சமந்தா மிகக்குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் நடிகை ஆக வளர்ச்சி அடைந்துள்ளார். இதற்கு அவரது திறமையும், அழகும் முக்கிய காரணம். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நாகசைதன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சில ஆண்டுகளிலேயே இவர்களது திருமண உறவு முறிவை சந்தித்தது. ஆனால் அதன் பின்பு தான் சமந்தா சினிமாவில் உச்சத்தை தொட்டார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய கவர்ச்சி நடனம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் சமந்தா தற்போது சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம். அதாவது சினிமாவில் இனி அதிகம் கவர்ச்சி காட்டக்கூடாது, படுக்கையறை காட்சி, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க கூடாது என முடிவெடுத்துள்ளார். இதற்குப் பின்னால் ஒரு முக்கிய விஷயம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது சமந்தா, நாக சைதன்யா பிரிவுக்கு காரணம் ஒரு படத்தில் அவர் படுக்கையறை காட்சியில் நடித்ததனால் தான் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற காட்சியில் நடித்ததால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட அது பூதாகரமாக வெடித்து இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர்.
ஆனால் தற்போது மோசமான கவர்ச்சியில் நடித்து வந்த சமந்தா திடீரென இந்த முடிவுக்கு வந்த காரணம் என்னவென்றால் நாகசைன்யாவுடன் மறுபடியும் சமந்தா சேர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான் தற்போது அதிகமான படங்களில் சமந்தா ஒத்துக்கொள்ளாமல் உள்ளாராம்.
அதுமட்டுமின்றி ஒரு பேட்டியில் சமந்தாவின் அப்பா நாக சைத்தன்யா குடும்பத்தில் நல்ல நட்புடன் பழகி வருகிறேன். சமந்தா மற்றும் நாகசைதன்யாவும் விரைவில் சேர வாய்ப்புள்ளது போல கூறி இருந்தார். இதை அறிந்த சமந்தா ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.