தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் மிகக் குறுகிய காலத்திலேயே உச்ச நடிகை ஆகிவிட்டார். அதுமட்டுமின்றி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடம் சமந்தாவுக்கு தான்.
இந்நிலையில் சமந்தா தனது மார்க்கெட் உச்சத்தில் உள்ள போதே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்த இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே இவர்களது திருமண வாழ்க்கை முறிவை சந்தித்தது.
இதற்கு பல காரணங்கள் இணையத்தில் வெளியானது. அதில் படங்களில் சமந்தா அதிகமான கவர்ச்சி காட்டுவதால் இவர்கள் குடும்பத்திடையே பிரச்சனை வந்ததாக கூறப்பட்டது. அதன் பின்பு விவாகரத்து பெற்றவுடன் சமந்தா அதிக கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.
அதுவும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாடல் வேற லெவலில் ட்ரெண்டானது. இதைத்தொடர்ந்த நாகசைதன்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.
ஆனால் தற்போது சமந்தாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் நடக்க உள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது சமந்தா ஃபேமிலி மேன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அவருக்கு காதல் மலர்ந்து உள்ளதாம்.
அதுவும் சமந்தா காதலிக்கும் நபர் பிடவுனைச் சேர்ந்தவர் என்ற கூறப்படுகிறது. மேலும் அவரைப் பற்றி வேறு எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. இந்தச் செய்தி குறித்த சமந்தா அறிவித்தால் மட்டுமே இதன் உண்மை தன்மை வெளியாகும்.