சரத்குமார் இந்த வயதிலும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு, மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் சரத்குமார் நடித்திருந்தார். இப்போது அவருடைய நடிப்பில் போர் தொழில் என்ற படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் அசோக் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். போர் தொழில் படம் கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும் போதே பதப்பதைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அதாவது இளம்பெண்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்று போலீஸ் அதிகாரியான சரத்குமார் விசாரணை நடத்துகிறார். அப்போது அவருடைய பயிற்சியாளராக அசோக் செல்வன் வருகிறார். மேலும் கொலை நடந்த இடத்தில் எப்படி நடந்திருக்கும் என்பதை அசோக்செல்வனை வைத்து ஆய்வு செய்கிறார் சரத்குமார்.
கடைசியில் இந்த பெண்களை அசோக் செல்வன் தான் கொன்றுள்ளார். இவ்வாறு இளம் பெண்களை அவர் கொல்வதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ். மேலும் இந்த ட்ரெய்லர் வைத்து பார்க்கும் போது சரத்குமார் தரமான சம்பவம் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அசோக் செல்வன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாக இருக்கிறது. ட்ரெய்லர் மூலம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பல மடங்கு அதிகரித்துள்ளது. அதுமட்டும்இன்றி கொலை பண்றவன்
எப்படிப்பட்டவனு, அவன் பண்ற கொலையை படிச்சா தான் தெரியும் டயலாக் அல்டிமேட்டாக உள்ளது.