தயாரிப்பாளருக்கு ஷோபா சந்திரசேகர் போட்ட பட்ட நாமம்.. மூன்றாம் பிறை கிளைமேக்ஸ் காட்சி போல் நடந்த சம்பவம்

Vijay: விஜய் வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு ஹிட் படம் கொடுத்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவின் சமீபத்திய இன்டர்வியூ பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய விஷ்ணு படத்தை இவர் தயாரித்தார்.

விஜயின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை என்பது இவர் தேருவாரா என்ற நிலைமையில் தான் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது விஷ்ணு.

ஷோபா சந்திரசேகர் போட்ட பட்ட நாமம்

அப்போதைய காலகட்டத்தில் விஜயை வைத்து யாருமே படம் தயாரிக்க முன்வரவில்லை. பல படங்களை விஜயின் அம்மா சோபா சந்திரசேகர் தான் தயாரித்தார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாலாஜி பிரபு முன் வந்து விஷ்ணு படத்தை தயாரித்தார்.

மேலும் இந்த விஷ்ணு படத்தில் தான் விஜய் உடன் இணைந்து ஷோபா சந்திரசேகரை தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா பாடலை பாட வைத்திருந்தார்கள். இதனால் அடுத்தடுத்து விஜயை பாலாஜி பிரபு தயாரிப்பில் நடிக்க வைக்கிறோம் என்று சொல்லி கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார்கள்.

விஷ்ணு படத்திற்கு பிறகு விஜய்க்கு பூவே உனக்காக என்ற சூப்பர் ஹிட் படம் கிடைத்து. விஜயின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. விஜய் பிசியாக படங்களில் புக்காகி கொண்டிருந்த நேரம் பாலாஜி பிரபு விஜய் கால் சீட்டுக்காக அவருடைய வீட்டுக்கு போன் செய்து இருக்கிறார்.

அப்போது ஷோபா சந்திரசேகர் அந்த போனை எடுத்திருக்கிறார். பாலாஜி பிரபு தன்னுடைய பெயரை சொல்லியும் சோபா யாருன்னு தெரியலையே என்று சொல்லி இருக்கிறார். விஷ்ணு பட தயாரிப்பாளர், உங்களை கூட தொட்டபெட்டா என்ற பாட்டை கூட பாட வைத்தேனே என்று ஞாபகப்படுத்தினாராம்.

எனக்கு ஞாபகம் இல்லையே என்று ஷோபா சொல்லி இருக்கிறார். நான் உங்க வீட்டிற்கு எல்லாம் வருவேன், நண்டு ரசம் எல்லாம் வார வாரம் வச்சு கொடுப்பீங்களே என்று கேட்டிருக்கிறார். அதற்கு நான் நிறைய பேருக்கு அந்த மாதிரி செஞ்சிருக்கேன் எனக்கு நீங்க யாருன்னு தெரியலையே என்று சொல்லி போனை வைத்திருக்கிறார்.

அதிலிருந்து ஒரு மணி நேரத்தில் ஒரு லட்ச ரூபாயை பாலாஜி பிரபு வீட்டிற்கு கொண்டு வந்து சந்திரசேகர் வீட்டு அசிஸ்டன்ட் கொடுத்திருக்கிறார். உண்மையிலேயே தன்னை ஞாபகம் இல்லை என்றால் எப்படி இந்த ஒரு லட்சம் ரூபாய் நியாபகம் இருக்கும்.

உண்மையிலேயே என்னுடைய நிலைமை அன்று மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் காட்சியில் வரும் கமலஹாசனின் நிலைமை போன்று தான் இருந்தது என பகிர்ந்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.