ஆசையும் பேராசையும் கலந்த கரு.. சுந்தர் சி, அனுராக் காஷ்யப் மோதும் One 2 One ட்ரெய்லர் எப்படி இருக்கு.?

One 2 One Trailer: சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் அரண்மனை 4 வெளிவந்து சக்கை போடு போட்டது. அதையடுத்து தற்போது அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒன் டூ ஒன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

கே திருஞானம் இயக்கத்தில் சுந்தர்.சி-யுடன் இணைந்து அனுராக் காஷ்யப், நீது சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகாராஜா படத்தில் வில்லனாக மிரட்டிய அனுராக் இதில் சைக்கோ வில்லன் போல் இருக்கிறார்.

அந்த வகையில் ட்ரைலர் ஆரம்பத்திலேயே திகில் கலந்த சஸ்பென்ஸாக தொடங்குகிறது. அதில் வில்லனுக்கும் ஹீரோவுக்கும் இருக்கும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் கதையின் மையக்கரு என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

சுந்தர் சி-யுடன் மோதும் அனுராக்

அதன்படி சுந்தர் சி வில்லனை தேடி அலைவதும் வில்லன் அவருக்கு போக்கு காட்டும் காட்சிகளும் காட்டப்படுகிறது. மேலும் ட்ரெய்லர் முழுவதும் வசனங்கள் தான் ஆக்கிரமித்திருக்கிறது. ஆசையும் பேராசையும் கலந்த கரு நான்.

ஆண்டவனே நல்லவன் பக்கம் தான் இருப்பாரு. தோல்வியே இருந்தாலும் முயற்சி செய்யாமல் விடமாட்டேன் போன்ற கிரிஞ்சான வசனங்களும் இருக்கிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதியின் குரலும் வருகிறது.

அப்படி என்றால் அவர் கெஸ்ட் ரோலில் வருகிறாரா அல்லது மாவீரன் படத்தில் கொடுத்தது போல் வாய்ஸ் மட்டும் தந்துள்ளாரா என்பது படம் வெளி வந்தால் தெரிந்து விடும். ஆனால் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் இருக்கும் இப்படம் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →