ஆட்டம் காட்டும் நயன்தாரா.. மதில் மேல் பூனையாக சுந்தர் சி

Nayanthara : மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நிறைய பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் குஷ்பூ தனது சமூக வலைதளத்தில் இந்த படத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை சுமூகமாக படபிடிப்பு சென்று கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

இப்போது நயன்தாராவால் சுந்தர் சி சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஐசரி கணேஷ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது. சுந்தர் சி பொதுவாகவே ஒரு படத்தை விரைவாக எடுத்து முடிக்க கூடியவர்.

அந்த வகையில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 மற்றும் மத கஜ ராஜா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. வடிவேலுவை வைத்து எடுத்த கேங்ஸ்டர் மட்டும் சிறிய தடுமாற்றத்தை கொடுத்தது.

நயன்தாராவால் சுந்தர் சிக்கு ஏற்பட்ட சிக்கல்

இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு முமரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஈசிஆரில் 10 நாட்கள் சூட்டிங் நடத்த சுந்தர் சி ஏற்பாடு செய்திருந்தாராம். ஆனால் நயன்தாரா மூன்று நாட்கள் மட்டுமே டேட் கொடுப்பேன் என்று கூறிவிட்டாராம்.

சரி பொள்ளாச்சியில் அடுத்த ஷூட்டிங் இருக்கிறது என்று சுந்தர் சி கூறியிருக்கிறார். ஆனால் அதற்கும் ஆட்டம் காட்டி இருக்கிறார் நயன்தாரா. அதாவது தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஷூட்டிங் இருப்பதால் அதை முடித்துவிட்டு தான் பொள்ளாச்சி ஷூட்டியில் கலந்து கொள்வேன் என்று கூறிவிட்டாராம்.

இதனால் நயன்தாராவை வைத்து இந்த படத்தை எப்படி முழுசாக எடுத்து முடிப்பது என்று தெரியாமல் சுந்தர் சி இருக்கிறார். இந்த படத்தை பாதியிலேயே டிராப் செய்வதா அல்லது நயன்தாரா சொன்ன டேட்டில் எடுக்க முடிப்பதா என மதில் மேல் பூனையாக சுந்தர் சியின் மனநிலை இருந்து வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →