பொறுமையை இழந்து வாடிவாசலுக்கு சூர்யா வைத்த பொறி.. மொத்தமாய் கதம் பண்ணிய வெற்றிமாறன்

வாடிவாசல் கடந்த மூன்று வருடங்களாக இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கத்தில் இந்த படத்தை தயாரிக்கவிருக்கும் கலைப்புலி எஸ் தானு உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார். எப்போதெல்லாம் அவர் வெளியிடங்களுக்கு வந்தாலும் அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி வாடிவாசல் அப்டேட் தான்.

அவரும் வருகிற 2025 ஜூலை மாதத்தில் படத்தை ஆரம்பித்து விடலாம் என திட்டம் போட்டு இருந்தார். ஆனால் இப்பொழுது சூர்யா எடுத்த அதிரடி முடிவால் மொத்த படத்திற்கும் சிக்கல் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை பொறிவைத்து பிடித்துள்ளார் சூர்யா.

இந்த பிரச்சனையில் பொறுமையை இழந்த சூர்யா வெற்றி மாறனை சந்தித்து இந்த படத்தை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தரப்பில் 2 வருடங்கள் கால் சீட் கேட்டுள்ளார். அதற்கும் ஒரு வழியாக ஒத்துக்கொண்ட சூர்யா இந்த படம் எப்பொழுது முடியும் எனவும் கேட்டுள்ளார்.

சூர்யா இந்த படத்தை கமிட் செய்யும் போது 30 கோடிகள் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் ஆனால் இப்பொழுது 65 கோடிகள் வரை வாங்குகிறார். இதனால் வாடிவாசல் படம் ஒரே பாகத்தோடு முடிந்து விட வேண்டும், இரண்டாம் பாகம் எடுக்கக் கூடாது எனவும் கட்டளைப் போட்டுள்ளார்.

இதற்கெல்லாம் வெற்றிமாறனிடம் தெளிவான பதில் இல்லாததால் சூர்யா இப்பொழுது இந்த ப்ராஜெக்ட்டை ட்ராப் செய்யும் முடிவில் இருக்கிறார். வெற்றிமாறனும் அதே மனநிலைக்கு போய்விட்டார். மறுபக்கம் தயாரிப்பாளர் தானு இருவருக்கும் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு முழித்துக் கொண்டிருக்கிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →