மீண்டும் சூர்யாவுக்கு வந்த செக்.. இந்த முறையாவது ஜெயிப்பாரா?

2014- வெளியான சூர்யாவின் மாஸ் படமான அஞ்சான் குறித்து ரசிகர்கள் நல்ல எதிர்பார்ப்பை வைத்திருந்தனர் ஆனால் படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியில் முடிந்தது.

தற்போது அஞ்சான் திரைப்படம் மீண்டும் 11 வருடங்களுக்குப் பிறகு திரையில் ரிலீஸாவதாக தகவல் பரவி வருகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு!

சமீப பேட்டி ஒன்றில் அஞ்சான் படத்தை இயக்கிய லிங்குசாமி படத்தை மீண்டும் திரையிடப்படுவதாக கூறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கூறியதாவது,

அஞ்சான் படத்தை பல கடின உழைப்பை போட்டு எடுத்தோம், ஆனால் அந்த படம் இப்படி தோல்வியில் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. தற்போது படத்தில் புதிய எடிட்டிங் செய்துள்ளோம். அதனாலயே இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

படத்தில் இருக்கும் மாற்றங்கள்!

படத்தில் இருக்கும் பழைய காட்சிகளை நீக்கி இந்த காலத்திற்கு ஏற்ப சில காட்சிகளை இணைத்துள்ளனர். இசையில் கூட சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் கதையை ரசிக்கும்படி கதை ஓட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படம் திரையில் நல்ல வெற்றியை கொடுக்காவிட்டாலும் சூர்யா மற்றும் வித்யுத் ஜம்வால் இவர்களின் மாஸ் ஹீரோ காட்சி மற்றும் நட்பு இன்றளவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று தான் வருகிறது.

அதனால் தான் இந்த ரீஎடிட் பதிப்பு மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்கும் அஞ்சான் திரைப்படம் ரீஎடிட் செய்து எப்போது திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →