பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பிளாப் சந்தித்த நால்வர்.. ஆதித்த கரிகாலனின் அதிர்ஷ்டம்!

Vikram : மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருந்தது.

ஆனால் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் இயக்குனர் அடுத்ததாக கொடுத்த படங்கள் எதிர்பாராத விதமாக மிக மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் காதல் மன்னவனாக வந்திய தேவன் கதாபாத்திரத்தில் வளம் வந்தார் கார்த்தி.

இவர் அடுத்ததாக ஜப்பான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கார்த்திக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஜெயம் ரவி அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக அவருக்கு அகிலன் படம் ரிலீஸ் ஆனது.

பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு பிளாப் கொடுத்த நான்கு பிரபலங்கள்

இப்படம் வந்த சுவடே தெரியாத அளவுக்கு இருந்தது. படத்தின் இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்கு பிறகு கமலை வைத்து தக் லைஃப் எடுத்திருந்தார். இந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்று வசூல் செய்ய முடியாமல் திணறி வருகிறது.

அதேபோல் குந்தவையாக வளம் வந்த திரிஷாவுக்கு தி ரோடு படம் வெளியானது. இப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் கதையின் நாயகனாக ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.

இவருக்கு மட்டும் அடுத்ததாக வெளியான தங்கலான் மற்றும் வீரதீர சூரன் படங்கள் ஹிட் அடித்தது. இதற்கு முன்னதாக மகான், கோப்ரா என தோல்வி படங்களை கொடுத்த விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு அதிர்ஷ்டம் அடித்தது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →