அஜித் துணிவு படத்தை முடித்த கையோடு ஏகே62 படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்போது இந்த படத்தில் விக்னேஷ் சிவன் வேண்டாம் என்று வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்ய உள்ளதாக தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்குள்ளாகவே ஏகே 63 இயக்குனரை பற்றி பேச்சு இப்போதே வர தொடங்கியுள்ளது.
எப்போதுமே அஜித் ஒரு இயக்குனருடன் கூட்டணி போட்டால் அடுத்தடுத்த படங்களும் அவரது இயக்கத்தில் தான் நடித்து வருவார். ஆனால் ஏகே 62 படத்திற்கு பிறகு வேறு ஒரு இயக்குனர் படத்தில் அஜித் நடிக்கவிருக்கிறாராம். இதற்கான கதை ஆலோசனை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் ஒருவருடன் அஜித் கூட்டணி போடுவது சில காலமாக தள்ளி போய்க்கொண்டே இருந்தது. அதாவது இயக்குனர் ஷங்கர் ரஜினி, கமல், விஜய் என முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி விட்டார். ஆனால் அஜித்துடன் தற்போது வரை இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் ஏற்கனவே ஷங்கர் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். ஆகையால் ஏகே 63 படத்தை ஷங்கர் இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது ஷங்கர் ராம்சரணை வைத்து ஆர்சி 15 படத்தை இயக்கி வருகிறார்.
தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களுமே தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் அடுத்த படத்திற்கான யோசனையில் ஷங்கர் இருக்கிறாராம். ஆகையால் அடுத்ததாக முதல்முறையாக அஜித், ஷங்கர் கூட்டணியில் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஷங்கருக்கு போட்டியாக புஷ்பா பட இயக்குனர் சுகுமாரும் அஜித்துக்கு ஒரு கதை சொல்லி உள்ளாராம். மேலும் இந்த இரு படங்களுமே கண்டிப்பாக உருவாகும் என்றாலும் அஜித் முதலில் ஷங்கரை தேர்ந்தெடுக்கிறாரா அல்லது சுகுமாரை தேர்ந்தெடுக்கிறாரா என்ற குழப்பம் நிலவி வருகிறது.