கோலிவுட்டில் சில காம்போக்கள் இணைந்தாலே அது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும். அப்படிப்பட்ட காம்போ தான் அனிருத்- தனுஷ் கூட்டணி. தனுஷின் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அதன் பிறகு இவர்களது காம்போவில் வரிசையாக எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மாரி என இவர்களுடைய வெற்றிக் கூட்டணி நீண்டு கொண்டே சென்றது.
இதனால் அனிருத் மல மலவென ஹிட் கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களின் படங்களுக்கெல்லாம் அனிருத் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த அளவிற்கு படு பிஸியாக இருந்து வருகிறார். இவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்தார். இதனால் இவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் அது இப்போது பெரிய விரிசலாக மாறிவிட்டது. தனுஷ் மற்றும் அனிருத் இருவருக்கும் ஒரு மனக்கசப்பு இருந்து வருகிறது. அந்த மனக்கசப்பு இப்பொழுது பெரிய லெவலில் மாறியது. ஏற்கனவே தனுஷின் 50-வது படத்தில் கமிட்டாகி இருந்த அனிருத், இப்பொழுது விலகுவதாக ஒரு செய்தி அடிபட்டு வருகிறது.
இந்த படத்திற்கு 6 கோடிகள் வரை சம்பளம் வாங்கவிருந்தார் அனிருத். ஆனால் இப்பொழுது கவின் நடிக்கும் புது படம் ஒன்றிற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸின் படத்தில் வாங்கும் சம்பளம் 6 கோடியை தூக்கி எறிந்து விட்டு லோ பட்ஜெட் படமாகிய கவின் படத்திற்கு வந்துவிட்டார் என்றால், இதில் ஏதோ உட்கட்சிப் பூசல் இருக்கிறது.
டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு கவினை வைத்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். ஏத்திவிட்ட ஏணி தனுஷை விட்டுவிட்டு வளரும் இளம் நடிகர் கவினின் படத்திற்கு இசையமைப்பது தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.