இயக்குனர்கள் பொதுவாகவே ஒரு படத்தின் கதையை ஒரே நடிகைகளுக்கு சொல்ல மாட்டார்கள். அவர்கள் நினைத்த நடிகர்கள் கதை பிடிக்கவில்லை, கால்ஷீட் இல்லை என ஏதேனும் கூறி மறுத்துவிட்டால் அந்த கதையை வேறு நடிகர்களை வைத்து படத்தை இயக்கிவிடுவார்கள். அப்படி இயக்கும் படங்கள் தோல்வியடைந்தாலோ, சுமாராக இருந்தாலோ பரவாயில்லை, ஆனால் படம் ஹிட்டானால் அவ்வளவு தான்.
அந்த வாய்ப்பை மறுத்த நடிகர்கள் கடைசி வரை புலம்பித் தள்ளுவார்கள். அப்படி பல நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு இன்று பட வாய்ப்புக்காக ஏங்கித் தவித்தும் வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் தனுஷுக்கு முன்பாக அக்கடதேசத்து நடிகர் ஒருவர் தேர்வாகியுள்ளார். ஆனால், அவர் இப்படத்தில் நடிக்க மறுத்ததையடுத்து படம் வெற்றியானவுடன் வருத்தப்பட்டுள்ளார்.
அவர் அந்த வாய்ப்பை மறுக்கவே வெற்றிமாறன் அடுத்தபடியாக சிம்புவை அணுகியுள்ளார். ஆனால் நடிகர் சிம்பு அந்த சமயத்தில் உடல் எடை அதிகரித்து இருந்ததால், சிம்பு அப்படத்தில் நடிக்க மறுத்தார். அதன் பின்பு தான் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகரான தனுஷ் இப்படத்தில் கமிட்டானார். அன்பு கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில், நல்லவேளை சிம்பு நடிக்கவில்லை என ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர்.
அந்த வகையில் சிம்புவுக்கு அடுத்தபடியாக அக்கடு தேசத்து நடிகரும் இப்படத்தில் நடிக்க மறுத்துள்ள நிலையில் அவர் யார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகராக அறிமுகமாகி, என்றும் இளமையாகவும், ஸ்டைலிஷ் ஸ்டாராகவும் வலம் வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும், 2021 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் ரிலீஸான புஷ்பா படம் இவரை இந்தியா முழுவதும் திரும்பிப்பார்க்க வைத்தது எனலாம்.
புஷ்பா, புஷ்பராஜ் என இப்படம் முழுவதும் அல்லு அர்ஜுன் டயலாக்குகளை கூறி, சந்தன மர கடத்தல், சண்டை, காதல், காமெடி என பேன் இந்திய திரைப்படமாக வெளியாகி செம ஹிட்டானது. இதனிடையே புஷ்பா 2 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவும் வெளியாகி இணையத்தில் வைரலானது. அந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் புடவை அணிந்து, கழுத்தில் எலுமிச்சை மாலை போட்டுக்கொண்டு, சாமி தோற்றத்தில் காட்சியளித்து பிரம்மாண்டமாக தோன்றினார்.
இதனிடையே முதன்முதலில் வடசென்னை படத்தில் அல்லு அர்ஜுனை தான் அன்பு கேரக்டரில் நடிக்க வைக்க வெற்றிமாறன் அணுகியுள்ளார். ஆனால் வடசென்னை படத்தில் நடிக்கவேண்டுமானால் வடசென்னை மக்களை நன்றாக உள்வாங்க வேண்டும். அல்லு அர்ஜுன் தெலுங்கு மக்களுடன் பல வருடங்கள் இருந்ததால், தமிழில் வந்து இப்படத்துக்கு தயாராக பல வருடங்களாகும் என கூறி இவர் இப்படத்தை நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.