மகனின் போஸ்டர் வெளியீட்டில் கூட கலந்து கொள்ளாத விஜய் சேதுபதி.. உண்மையை மறைக்க முடியுமா.?

Vijay Sethupathi: நடிகர்களின் வாரிசுகள் ஹீரோ அவதாரம் எடுப்பது என்பது ஒண்ணும் தமிழ் சினிமாவுக்கு புதிதானது இல்லை. இருந்தாலும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ரொம்ப சீக்கிரமாகவே சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் நடிக்கும் படத்தின் விழா இன்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. படத்தின் போஸ்டர் உம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பீனிக்ஸ் வீழான் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டரில் சூர்யா சாக்கை வைத்து முகத்தை மூடிக்கொண்டு இருக்கிறார். ஒரு கண் மட்டும் தெரிகிறது. முகத்தைச் சுற்றி ரத்த கரை இருக்கிறது. இதை வைத்து இந்த படம் ஆக்சன் படமாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது.

மகனின் போஸ்டர் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொள்ளவில்லை என்பது எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசுவிடம் மீடியாக்கள் தொடர்ந்து விஜய் சேதுபதி ஏன் வரவில்லை என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கு அனல் அரசு அவர் மலேசியாவில் ஷூட்டிங்கில் இருக்கிறார், வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்தார் என்று சொல்லிவிட்டார்.

விஜய் சேதுபதி கலந்து கொள்ளாததன் காரணம்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைப்பது போல் பதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனல் அரசு. விஜய் சேதுபதி ஏன் தன்னுடைய மகன் நடிக்கும் பட போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. விஜய் சேதுபதி பல வருடங்களாக கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்த ஹீரோ. தற்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார்.

ஆனால் மகன் சூர்யாவுக்கு எடுத்த உடனேயே ஹீரோ வாய்ப்பு கிடைத்திருப்பது விஜய் சேதுபதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நிறைய வாரிசு நடிகர்கள் அப்பாவை போல் ஜெயிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் சூர்யாவும் சேர்ந்து விடுவாரோ என்ற பயத்தில் விஜய் சேதுபதி இருக்கிறாராம் .

மேலும் மகனுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் தன் முகத்தை காட்டி விட்டால் நெப்போடிசம் என்னும் வார்த்தையில் எல்லாம் மறைந்துவிடும் என்று விஜய் சேதுபதி நினைக்கிறார் அதனால் தான் அந்த பட விழாவில் அவர் தலையை காட்டவில்லை. இதை போன்று தான் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் பட பூஜை விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →