விஜய் கூத்தாடின்னா கமல் யார்.? பிரபலத்தின் அனல் பறக்கும் கேள்வி

Vijay-Kamal: தற்போது விஜய்யின் அரசியலை அனைத்து கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் அது சமீப காலமாக எல்லை மீறிய செயலாக இருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் 10 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியரை கௌரவப்படுத்தி ஊக்கத்தொகை கொடுத்து வருகிறார் விஜய். இந்த வருடமும் அதை செய்தார்.

வழக்கம் போல பிள்ளைகள் அவரை அண்ணனாக நினைத்து கை கொடுப்பது போட்டோ எடுப்பது என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். விஜயும் வழக்கம் போல அவர்களின் தோள் மீது கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

விஜய் கூத்தாடின்னா கமல் யார்.?

ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அதை மோசமாக பேசி கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அது மட்டும் இன்றி விஜய்யை கூத்தாடி என்று கூட அவர் பேசியிருந்தார்.

இது குறித்து வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தன் கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் கூத்தாடி என்றால் ஆளும் கட்சியின் ஆதரவோடு இன்று எம் பி ஆகியிருக்கும் கமல் யார்.

வேல்முருகன் ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருக்கிறார். அப்படி இருப்பவர் கமலுக்கு ஏன் இந்த பதவியை கொடுத்தீர்கள் அவர் ஒரு கூத்தாடி என்று சொல்ல வேண்டியது தானே. எதற்காக விஜய்யை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டும்.

எந்த கருத்தாக இருந்தாலும் அதை சொல்லும் விதம் இருக்கிறது. பெண் பிள்ளைகளை இப்படி பேசுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டிவிகே தொண்டர்கள் ஆவேசமடைந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வேல்முருகன் அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யாமல் விட்டு விட்டார்கள் என பிஸ்மி இந்த விஷயத்தில் தன் கருத்தை கூறியுள்ளார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →