கொன்றால் பாவம் தின்றால் தீரும்.. சர்ச்சை கிளப்பிய மோகன் லாலின் துடரும்

Mohanlal : மோகன் லால் மற்றும் நடிகை சோபனா இணைந்து நடித்து, ஏப்ரல் 25-ஆம் தேதி வெளியான துடரும் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்தது.

திருடப்பட்ட வசனம்!

பின்பு “துடரும்” படம் ஓடிடி-யில் வெளியானது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றது துடரும் திரைப்படம். சில நாட்களுக்கு பிறகு, இந்த படத்தை பார்த்த இயக்குனர் சனல் குமார் சசிதரன், இந்த படத்தில் ஒரு வசனம் திருடப்பட்டதாக புகார் கூறியுள்ளார்.

மேலும்

2020-இல் இயக்குனர் சனல் குமார் தீயாட்டம் படத்தின் திரைக் கதையை எழுதி இன்னும் திரையில் வெளியிடவில்லை. அந்தப் படத்தில் முக்கிய நாயகனாக இருக்கும் ஆட்டோ டிரைவர் பேசும் கொன்றால் பாவம் தின்றால் தீரும் இந்த வசனம் முக்கியமாக இடம்பெற்றிருக்கும்.

துடரும் திரைப்படம்!

தீயாட்டம் படக் கதையில் நடிகர் ஆட்டோ டிரைவராக இருப்பார் தற்போது வெளியான துடரும் படத்தில் நடிகர் மோகன்லால் கார் டிரைவராக இருப்பார்.

இந்தப் படத்தில் தான் எழுதியிருந்த கொன்றால் பாவம் தின்றால் தீரும்” வசனத்தையே மோகன்லால் பேசுவது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறிய சனல் குமார்.

இது என் படக் கதையில் இருந்து எடுக்கப்பட்ட வசனம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த துடரும் திரைப்படத்தில் மோகன்லாலுக்கு அந்த வசனம் அவசியம் இல்லை என்ற போதிலும் உபயோகித்திருக்கிறார்கள்.

விரைவில் நான் எழுதிய அந்த படத்தின் கதை திரைக்கு வரும் என இயக்குனர் சனல் குமார் சசிதரன் தனது வலைதளப் பகுதியில் பதிவிட்டுள்ளார்.

இன்னும் மோகன்லால் மற்றும் துடரும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ பதில்கள் எதுவும் அளிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரம் மலையாள சினிமா உலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →