வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் துணிவு படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்று வருகிறது. இந்த படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு பலராலும் வியந்து பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பட்டிமன்ற பேச்சாளரான மோகனசுந்தரம் துணிவு படத்தில் நடித்திருந்தார். பண்டிகை காலங்களில் சுகி சிவம் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றங்களில் மோகனசுந்தரம் பேசி உள்ளார்.
எந்த விஷயமாக இருந்தாலும் மிக நகைச்சுவையாக கொண்டு செல்லும் இவரது பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் பட்டிமன்ற பேச்சாளராகவே நடித்திருந்தார். இந்நிலையில் துணிவு படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு மோனசுந்தரத்திற்கு கிடைத்தது.
இந்த படத்தில் மைபா என்ற மூத்த பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் மோகனசுந்தரம் நடித்திருந்தார். இவர் நடித்த காட்சிகளில் திரையரங்குகளில் கைதட்டல் பறந்தது. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கனகச்சிதமாக நடித்திருந்தார். வினோத்தின் செலக்சன் எப்போதுமே கரெக்ட் ஆகத்தான் இருக்கும் என்பதை மோகனசுந்தரம் நிரூபித்திருந்தார்.
இந்நிலையில் துணிவு படம் உண்மையான வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதற்காக வினோத் பல வருடங்களாக ஆராய்ச்சி செய்துள்ளார். அதற்கு கிடைத்த சரியான பலன் ஆக மக்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இப்போது நிஜ மைபா யார் என்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள். துணிவு படத்தை தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரத்திற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
