Vettrimaran: வெற்றிமாறன் இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இதே மாதிரி தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வேண்டும் என்று கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல படங்களை தயாரித்தார்.
அந்த வகையில் உதயம் nh4, நான் ராஜாவாகப் போகிறேன், காக்கா முட்டை, கோடி, சங்கத் தலைவன், கருடன், bad girl போன்ற பல படங்களை தயாரித்தார். ஆனால் இப்படிப்பட்டவர் தற்போது இதுதான் என்னுடைய கடைசி படம் என்ற ஒரு அதிரடி முடிவை ஓப்பனாக சொல்லி இருக்கிறார்.
இந்த ஒரு விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக வருகிறது. அதாவது படம் எடுப்பது மிகவும் சுலபம் ஆனால் அதை தயாரிப்பது தான் கடினம் டிதம் என புரிந்து கொண்டேன். அதனால் இனி என்னுடைய தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம் நிறுவனத்தை க்ளோஸ் பண்ண போகிறேன்.
அதில் இருந்து இனி படம் தயாரிக்கப் போவதில்லை என்ற முடிவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு காரணம் என்னவென்றால் மனுஷி என்ற படத்தை அறம் பட இயக்குனர் கோபி நாயனார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் தயாரித்தார். இப்படம் தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்துவிட்டது.
அத்துடன் மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பம் வகையில் காட்சிகள் இருந்ததாகவும் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டு விட்டது. இதனால் இப்படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவித்து இருக்கிறார். இதே மாதிரி bad girl படமும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அதாவது வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஞ்சலி சிவராமன் நடிப்பில் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. அதாவது சிறுவர் சிறுமிகளை குறித்து மோசமான காட்சிகளை வைத்திருப்பதால் இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கி விடுமாறு மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
இதனை விசாரித்த நீதிமன்றம் யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து இந்த படத்தின் டீசரை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனால் வருகிற ஐந்தாம் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி இப்படம் சொன்ன தேதியில் வருமா என்ற சிக்கலில் வெற்றிமாறன் இருப்பதால் இனி படமே நான் தயாரிக்கவில்லை என்று நொந்து போய் அவருடைய முடிவை வெளியிட்டு விட்டார்.
இயக்குனராக இருக்கும் பொழுது யாரோ ஒருவர் தயாரிக்கிறார், நாம் படம் எடுத்தால் போதும் என்ற நினைப்பால் எந்தவித டென்ஷனும் இல்லாமல் இருந்திருப்பார். ஆனால் தயாரிப்பாளராக மாறிய பொழுது அந்த படம் மக்களிடம் போய் சேர வேண்டும், அதற்கான லாபமும் பெற வேண்டும் என்ற டபுள் மடங்கு டென்ஷனானால் நொந்து போன வெற்றிமாறன் இனி தயாரிப்பாளர் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறார்.