ராதிகா சன் டிவியில் இருந்து விலக இப்படி ஒரு காரணமா? நாட்டாமைக்கே தீர்ப்பு எழுதிய மனைவி

Actress Radhika: பல வருடங்களாக சன் டிவியின் இரவு 9:30 மணி நேரத்தை குத்தகைக்கு எடுத்த பெருமை ராதிகாவுக்கு உண்டு. சித்தியில் ஆரம்பித்த அவருடைய பயணம் சித்தி 2 வரை தொடர்ந்தது. ஆனால் திடீரென அவர் இப்போது பொதிகை பக்கம் சென்று விட்டார்.

ஆனால் சன் டிவிக்கும் இவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு தான் அங்கிருந்து ராதிகா விலக காரணமாக சொல்லப்பட்டது. அது மட்டுமில்லாமல் அவர் பொதிகைக்கு சென்றதைப் பார்த்ததுமே பலருக்கும் லேசாக ஒரு சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது.

அது சரத்குமாரின் தற்போதைய நடவடிக்கையின் மூலம் உறுதியாகிவிட்டது. அதாவது சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய பாஜக கூட்டணி பற்றி தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று கட்சியை பாஜகவுடன் அவர் இணைத்தது பேரதிர்ச்சியாக தான் இருந்தது.

திட்டமிட்டு செய்த ராதிகா

அதைப் பற்றி கேட்டபோது கூட இந்த முடிவை ராதிகாவுடன் தான் முதலில் சொன்னேன். அவர் எனக்கு பக்கபலமாக இருப்பேன் என்று சொன்னதாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் இது முன்பிருந்தே திட்டமிட்டு செய்த விஷயம் தான் என்று கூறப்படுகிறது.

அதிலும் ராதிகா தான் சரத்குமார் பின்னால் இருந்து தூண்டிவிட்டு இந்த முடிவை எடுக்க வைத்ததாகவும் பேசப்பட்டு வருகிறது.

உண்மையில் இந்த முடிவு கட்சித் தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை. லட்சக்கணக்கில் இருந்த மக்கள் தற்போது சரத்குமாரின் இந்த முடிவால் கட்சியை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஆனால் அதையெல்லாம் நாட்டாமை கண்டு கொள்ளவில்லை. இது முடிவு அல்ல தொடக்கம் என வளைத்து வளைத்து பேட்டி கொடுத்து வருகிறார்.

சினிமாவில் ஒரு நடிகராக நல்ல பெயரை எடுத்த அவர் அரசியலில் ஏனோ ஜொலிக்கவில்லை. இதற்கு இரண்டாவது மனைவியும் ஒரு காரணம் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →