செப்டம்பர் 12, 2025 – தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய நாளாக அமைந்திருக்கிறது. ஒரே நாளில் எட்டு படங்கள் திரையரங்குகளை அடையவுள்ளன. பல்வேறு வகை கதைகளும் பிரபல நடிகர்களின் நடிப்பும் கொண்ட இவ்வெளியீடுகள் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kaantha – 1950களின் மத்ராஸ் பின்னணியில் மனித உறவுகளை மையமாகக் கொண்ட period drama. துல்கர் சல்மான், பக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Kumaara Sambavam – இளசுகளின் வாழ்க்கையை சிரிப்பு-சிரிப்பாக சொல்லும் comedy-drama. பாக்கியலட்சுமி சீரியல் குமரன் தங்கராஜன் மற்றும் பயல் ராதாகிருஷ்ணா முன்னணி கதாபாத்திரங்களில்.
Thanal – ஒரு காவலரின் action thriller, அதேசமயம் குடும்ப ரீதியான பிரச்சனைகளை பேசுகிறது. அதர்வா, லவண்யா திரிபாதி, அஷ்வின் காகுமாணு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Blackmail – பணம், அதிகாரம், பிளாக்மெயில் ஆகியவற்றை மையமாகக் கொண்ட suspense thriller. ஜி.வி. பிரகாஷ் குமார், தேஜு அஷ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி நடித்துள்ளனர்.
Mirai – Super Yodha – ஒரு futuristic sci-fi adventure; உலகத்தை காப்பாற்றும் ஹீரோவின் பயணம். முன்னணி கதாபாத்திரத்தில் தேஜா சஜ்ஜா.
Kaayal – குடும்ப பாசம், காதல், மனித உறவுகளை மையமாகக் கொண்ட emotional drama. நாயகியாக ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்.
Bomb – சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த quirky comedy-drama. அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் மற்றும் மற்றும் அபிராமி நடித்துள்ளனர்.
Enimey Nangadha Head Lines – சமூக பிரச்சினைகளை பேசும் satire-drama. தேவல்லா கவிதா, அன்னா ஆஷா முன்னணி கதாபாத்திரங்களில்.
இந்த எட்டு படங்களும் box office–இல் யார் முன்னிலை வகிப்பார்கள் என்பது சுவாரஸ்யம். Period drama, action thriller, sci-fi, family drama, comedy, satire என அனைத்து வகை படங்களும் ஒரே நாளில் ரசிகர்களுக்கு feast ஆக இருக்கிறது.