டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கும் அந்தாதூன் தமிழ் ரீமேக் டைட்டில் போஸ்டர் ரிலீஸ்.. வா தலைவா! வா தலைவா!

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்துடன் சிம்ரன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களாகவே பிரசாந்த் தமிழ் சினிமாவில் பெரிய அளவு வெற்றி படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். வித்தியாசமான முயற்சிகள் பல செய்தாலும் ரசிகர்களிடையே எந்த ஒரு படமும் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள பிரசாந்தின் அடுத்த படமாக ஹிந்தியில் சூப்பர் ஹிட்டடித்த அந்தாதுன் பட தமிழ் ரீமேக் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்கு அந்தகன் என பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார்.

அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு அந்தகன் படம் ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழுவினர் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

கண்டிப்பாக டாப் ஸ்டார் பிரசாந்த்க்கு அந்தகன் படம் ஒரு நல்ல கம்பேக் படமாக அமையும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பல தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் பிரசாந்துக்கு உள்ள ரசிகர் பட்டாளம் அப்படியே உள்ளது என்பதும் மறுக்க முடியாத ஒன்று.