பிரதீப் பார்முலாவை யூஸ் பண்ணும் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் கூட்டணி

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப், லவ் டுடே படத்தை எடுத்து அவரை ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு கிடைத்த ரசிகர்களை தக்க வைக்கும் விதமாக அடுத்து இயக்குனரிலிருந்து ஹீரோவாகவே மாறிவிட்டார். அந்த வகையில் அஸ்வித் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி( LIk) மற்றும் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட்(dude) என்ற படத்திலும் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் பிரதீப் படங்களை இயக்கப் போவதில்லை தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்கப் போகிறார். இவரை போலவே அடுத்த ஒரு இயக்குனரும் களமிறங்க போகிறார்.

அதாவது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் அடுத்து படங்களை இயக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தும் விதமாக தற்போது ஒரு புது கூட்டணியில் இணைந்து ஹீரோவாக பயணத்தை தொடங்கப் போகிறார்.

அந்த வகையில் சௌந்தர்யா ரஜினியுடன் கூட்டணி வைக்கும் விதமாக சத்யா என்கிற கேரக்டரில் அபிஷன் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தை பசிலன் நஸ்ரித் மற்றும் மகேஷ்ராஜ் பசிலன் என்கிற பேனரில் படம் தயாரிக்க போகிறார்கள். தற்போது இப்படத்திற்கு ப்ரொடக்ஷன் நம்பர் 4 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒரு படத்தை இயக்கி மக்களிடம் பரிச்சயமான பிறகு அதை வைத்து ஹீரோவாக நடிக்கும் நடிகர்களில் ஒருவராக டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் அபிஷன் இணைந்து இருக்கிறார். இதற்கான பட பூஜைகள் முடிந்து நிலையில் ஷூட்டிங் ஆரம்பமாகி விட்டது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →