கூட்டணிக்கு அழைத்த பாஜக.. திருப்பாச்சி ஸ்டைலில் பதில் சொன்ன தவெக தலைவர் விஜய்!

Vijay: தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் மொத்தமும் மிரண்டு போகும் அளவுக்கு இன்று விஜய் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி- 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க விஜய்க்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது ஒட்டுமொத்த தமிழகமும் தெரிந்த விஷயம்.

இதற்கு திருப்பாச்சி ஸ்டைலில் பதில் சொல்லி இருக்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். கொள்கை ரீதியான எதிரிகளுடன் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி எப்போதுமே வைக்காது. அரசியல் சுயலாபத்திற்காக கூடி குழைந்து இருக்க இது திமுக அல்லது அதிமுக கிடையாது, இது தவெக.

தவெக தலைவர் விஜய்!

அண்ணா மற்றும் பெரியாரை இழிவு படுத்திஅல்லது தமிழகத்தை சார்ந்த மூத்த தலைவர்களை இழிவு படுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கும் பாஜகவுடன் கூட்டணி என்பது எப்போதுமே கிடையாது என உரக்கச் சொல்லி இருக்கிறார்.

அதே போன்று மதவாத பிரிவினைகளை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. அதன் திட்டம் ஒரு நாளும் தமிழகத்தில் பழிக்கவே பழிக்காது என பேசி இருக்கிறார்.

கிட்டத்தட்ட விஜயின் இந்த பேச்சை பார்க்கும்போது. இதுவரை தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் தலைவர்கள் கூட இவ்வளவு உரக்க பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்ததில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →