TVK விஜய்-யின் அரசியலை கேள்விக்குறியாக்கிய நடிகர்.. சைலன்ட் சம்பவம்

தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகரான சூர்யா, தனது நடிப்பைத் தாண்டி சமூகத்தில் முக்கிய பங்களிப்பு அளித்து வருகிறார். அவரது அகரம் கல்வி அறக்கட்டளை மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவிகளைப் பெற்றுள்ளனர்.

அகரம் அறக்கட்டளையின் 20வது ஆண்டு, விதைத் திட்டத்தின் 15வது ஆண்டு விழா ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர்கள் வெற்றிமாறன், ஞானவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், வறுமையைத் தாண்டி வெற்றி அடைந்த மாணவர்கள், இன்று மருத்துவர், பொறியாளர் உள்ளிட்ட பல துறைகளில் நிலைத்து நிற்கின்றனர். அவர்களில் 51 பேர் மருத்துவர்கள் ஆகி, சமூகத்தில் ஒளி பரப்பும் நிலைக்குச் சென்றுள்ளார்கள்.

ஒருபுறம் சூர்யா இந்த 51 மருத்துவர்களை கௌரவித்து, கடின உழைப்பு மற்றும் சமூக பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சூர்யாவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மறுபுறம், நடிகர் விஜய் தனது TVK அரசியல் அமைப்பு மூலம் அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். ஆனால், அவரது நடவடிக்கைகள், குறிப்பாக NEET தேர்வு “ஏழைகளுக்கு எதிரான கொள்கை” என்று அவர் விமர்சிப்பது குறித்து இது அவருடைய உண்மையான சமூக சேவை அல்ல, அரசியல் லாபத்தை நோக்கமாகக் கொண்ட “கிளவுன் அரசியல்” என்று வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது சூர்யா வெளிப்படையாகக் கூறாமல் இருந்தாலும், தனது செயல்பாடுகள் மூலமாக விஜயின் “பொலிட்டிகல் ஷோவை” கேள்விக்குள்ளாக்கி உள்ளார் என்று மக்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.