‘ஆஹா இன்ப நிலாவினிலே’.. பகத் பாசில்-வடிவேலு கூட்டணியில் மாரீசன் ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Maareesan: பகத் காசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்திருக்கும் மாரீசன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. மாமன்னன் படத்திலேயே இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

இதைத் தொடர்ந்து தான் இயக்குனர் சுதிஷ் சங்கர் இந்த காம்போவை மீண்டும் ஒரு படத்தில் இணைத்து இருக்கிறார். படம் தொடங்கும் பொழுது ஆஹா என்பர் நிலாவினிலே என்ற பழைய பாடலுடன் தொடங்குகிறது.

மாரீசன் ட்ரெய்லர்

ட்ரைலர் முழுக்க இந்த பாடல் சந்தோஷமாகவும், சோகமாகவும் மாறி மாறி ஒலிக்கிறது. வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் நெருங்கிய நண்பர்கள் அல்லது அப்பா மகனாக இருக்க வேண்டும்.

இவர்கள் சந்தோஷமாக தங்கள் நாட்களை கழித்துக் கொண்டிருக்கும் போது மிகப்பெரிய பிரச்சனையை சிக்கிக் கொள்கிறார்கள். இதை மையமாக வைத்து தான் இந்த ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

மேலும் இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பது படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ். அது மட்டுமில்லாமல் நடிகர் பகத் பாசில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகமாக இருக்கிறது.

மேலும் இந்த படம் தனக்கு நிறைய விருதுகளை வாங்கிக் கொடுக்கும் என வடிவேலு ஏற்கனவே தெரிவித்திருந்தார். ட்ரைலரின் ஆரம்பத்தை பார்க்கும் பொழுது மீண்டும் ஒரு மெய்யழகன் படத்தை பார்ப்பது போல் இருந்தது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெரிய அளவில் பெற்று இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →