வைரமுத்து நல்ல மனிதர் இல்லை.. ஒரே பாடலால் சின்மயி-க்கு குவியும் ஆதரவு

வைரமுத்து மீது பலான விமர்சனங்களை சின்மயி ஓபன் ஆக மீடியா முன்பு போட்டு உடைத்தார். இதற்காகவே பல வருடங்களாக பாடகி சின்மயியை பாட விடாமல் கோலிவுட் வட்டாரமே வெளியேற்றி வைத்தது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சின்மயி பல இடங்களில் உண்மை பேசியதால் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர் என்று புலம்பி தவித்து வந்தார். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல மணிரத்தினம்-கமல் கூட்டணியில் உருவான Thuglife படத்தின் ஆடியோ வெளியீட்டில் சின்மயியை முத்தமழை பாடலால் ரசிகர்களை நனைய வைத்து பிரச்சனை கிளறி விட்டனர்.

Dhee என்ற பாடகி பாடிய பாடலை அவர் இல்லாத காரணத்தால் மேடையில் சின்மயி பாடி அந்த வீடியோ வைரலாகி பல பாராட்டுகளை பெற்றுது. அதாவது அவர் பாடிய பாடல் மண்டைக்குள்ளேயே ஓடிக் கொண்டிருக்கும் என்பது போன்று ரசிகர்கள் மனதில் பதிவாகிவிட்டது.

இதைப் பார்த்த விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் சின்மயி-க்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பேன். மீண்டும் அவர் சினிமாவிற்குள் சாதனை படைக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேட்டியளித்து இருந்தார். முன்னதாகவே James vasanth சின்மயி-க்கு ஆதரவாக பேசி பெரும் பரபரப்பு கிளம்பினார்.

தற்போது இளையராஜாவின் ரத்த சொந்தமான கங்கை அமரன் வைரமுத்து தன்னைத்தானே பாராட்டிக் கொள்வார். அவர் நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை என்று சர்ச்சையான ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த பிரச்சனையை முடிவு கட்ட வேண்டும் அல்லது திசை திருப்ப வேண்டும் என்று வைரமுத்து சமீபத்தில் தனது பாடல் வரிகளுக்கு இளையராஜா போல copy rights வாங்க முடிவெடுத்து சில வேலைகளை செய்து வருகிறாராம். சின்மயி-க்கு ஆதரவாக கோலிவுட்டில் முக்கிய புள்ளிகள் மணிரத்தினம், ஜேம்ஸ் வசந்த், விஜய் ஆண்டனி தற்போது கங்கை அமரன் என அதிகரித்துக் கொண்டே போகிறது.

இதனால் வைரமுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளாராம். இப்படி ஒரே மேடையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை தன் மேல் இன்டஸ்ட்ரி வைத்திருந்த கெட்ட பார்வையை துடைத்து எறிந்து விட்டு நல்ல மனிதர்களை சம்பாதித்து வருகிறார் சின்மயி.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →