சின்மயி விஷயத்தில் பதம் பார்த்த பழைய நண்பர்.. வைரமுத்துவுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சோ!

Vairamuthu: பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் தற்போது வைரமுத்துவின் நிலைமை ஆகிவிட்டது. ஏற்கனவே முத்த மழை என்ற ஒரு பாடலால் வைரமுத்துவின் இமேஜ்க்கு பெரிய அளவில் டேமேஜ் உருவாக்கப்பட்டு வருகிறது.

போதாத குறைக்கு பாலிய நண்பர் ஒருவர் படாத பாடு படுத்தும் அளவுக்கு கன்டென்ட் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் கொடுத்திருக்கிறார்.

பதம் பார்த்த பழைய நண்பர்

வைரமுத்து வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான தோழர்களாக இருந்தவர்கள் இளையராஜா மற்றும் அவருடைய சகோதரர் கங்கை அமரன். இளையராஜா மற்றும் வைரமுத்துவின் கூட்டணியில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன.

ஏதோ ஒரு சூழ்நிலையால் இவர்கள் இணைந்து பணியாற்றாமல் பிரியும் நிலை ஏற்பட்டது. இப்படிப்பட்ட உறவு விரிசலில் பல வருடங்களாக ஒருவரை ஒருவர் எந்த விதத்திலும் தவறாக பேசாமல் நாகரீகம் காத்து வந்தனர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன் பின்னணிப் பாடகி சின்மயி இடம் எதற்காக வைரமுத்து மீது இப்படி ஒரு பழி சொன்னாய் என்று கேட்கிறார். ஆரம்பத்தில் என்னவோ அந்தக் கேள்வி வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசுவது போல் தான் இருக்கிறது.

அதைத்தொடர்ந்து வைரமுத்துவின் வரிகள் தான் கண்ணியம் மிக்கவை, ஆனால் அந்த மனிதர் அப்படி கிடையாது.

அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற பாடல் எழுதி இருக்கிறார். ராஜ பார்வை படத்தை பொருத்தவரைக்கும் கமல் ஒரு பார்வையற்றவர். அப்படி இருக்கும்போது எப்படி ஒவ்வொரு துளியிலும் காதலியின் முகம் பார்ப்பார்.

இப்படித்தான் வித்தியாசமான கவிதைகளை எழுதக்கூடியவர். அதை அவரே பாராட்டியும் கொள்வார் என்று ரொம்பவும் கிண்டல் அடித்து பேசி இருக்கிறார். ஏற்கனவே வைரமுத்து மீது பல சர்ச்சைகள் எழந்து கொண்டிருக்கும் நேரத்தில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார் கங்கை அமரன்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →