உச்சகட்ட விரக்தியில் வெங்கட் பிரபு.. ஏஜிஎஸ் பிரச்சனைக்கு பின் விளையாடப் போகும் மங்காத்தா

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன் பின் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. கையில் எந்த படமும் இல்லை. விஜய் எச் வினோத் இயக்கி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

கோட் படத்தை முடித்துக் கொடுத்த பிறகு வெங்கட் பிரபு தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு அந்தப் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் எதிலும் கலந்து கொள்ளவில்லை. விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி இருவரும் மட்டுமே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

வெங்கட் பிரபு இந்த ப்ராஜெக்ட்டை நான் முடித்து விட்டேன் அதன் பிறகு அதில் எனக்கு எந்த வேலையும் இல்லை, மற்றவைகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ஏஜிஎஸ் நிறுவனத்திடம் கூறிவிட்டாராம். இதனால் அவர்களுக்குள் சில மனக்கசப்புகள் ஏற்பட்டதாக தெரிகிறது.

இப்பொழுது வெங்கட் பிரபு செல்லும் இடமெல்லாம், அவரிடம் அடுத்த பிராஜெக்ட் என்ன என்பதை தினமும் 10 பேருக்கு மேல் கேட்டு வருகிறார்களாம். கடந்த ஒரு வருடமாக கையில் எந்த படமும் இல்லாத அவருக்கு இப்பொழுது அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது.

பேசன் ஸ்டுடியோஸ் சுதன் ஏற்கனவே வெங்கட் பிரபுவுக்கு 2 கோடிகள் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அவருக்கு பைனான்ஸ் செய்து உதவியது கோல்ட்மைன் மணிஸ். இதனால் வெங்கட் பிரபு கால் சீட் இருப்பதால் அவரை சந்தித்து இருவரும் பேசி உள்ளனர்.

சென்னை ஐடிசி ஹோட்டலில் சந்தித்து பேசிய இவர்கள் அஜித்தை வைத்து மங்காத்தா 2 எடுக்க திட்டம் போட்டுள்ளனர். ஆனால் வெங்கட் பிரபுக்கும், அஜித்துக்கும் ஏற்கனவே சில மனக்கசப்புகள் இருந்து வருகிறது. அதனால் இந்த ப்ராஜெக்ட் கைகூடுமா என்பது யோசிக்க கூடிய ஒன்று.