நடிகர் ராஜேஷ் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Rajesh : மூத்த நடிகர் ராஜேஷ் காலமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கன்னிப்பருவதிலே என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

அச்சமில்லை அச்சமில்லை, சிறை, சாமி, ரெட், ஆட்டோகிராப் என பல படங்களில் அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.

இது தவிர சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் பேராசிரியராக நடித்திருந்தார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் ராஜேஷ் பணியாற்றி இருக்கிறார்.

உடல் நலக்குறைவால் உயிர் இழந்த மூத்த நடிகர் ராஜேஷ்

சினிமாவைப் போல ஜோதிடத்திலும் இவருக்கு நாட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் ராஜேஷின் சினிமா பயணம் இருந்துள்ளது. நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், எழுத்தாளர், சீரியல் நடிகர் என அனைத்திலும் முத்திரை பதித்திருக்கிறார் ராஜேஷ்.

இவ்வாறு பன்முகத்தன்மை கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு சினிமாவில் மிகப்பெரிய பங்கு ஆற்றி இருக்கிறார். தற்போது இவருக்கு 75 வயதாகி வரும் நிலையில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து இருந்தார்.

இந்த சூழலில் திடீரென என மூச்சு திணறல் ஏற்பட்டதால் இன்று காலை உயிரிழந்துள்ளார். இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →