நீங்க NOC குடுக்கலைனாலும் நா சிம்பு வச்சு வடசென்னை எடுப்பேன்.. தனுஷை பற்றி தெரிந்து முன்பே வெற்றிமாறன் போட்ட திட்டம்!

Dhanush: சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது சிம்பு ரசிகர்களின் பல நாள் கனவு. அந்த படம் ஒப்பந்தமாகி ப்ரோமோ சூட் வரை வந்த நிலையில் தனுஷ் NOC கொடுக்க மறுத்திருக்கிறார் என்ற செய்தி இன்று சமூக வலைத்தளத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தான் தற்போது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் அளவுக்கு ஒரு பெரிய நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

வெற்றிமாறன் போட்ட திட்டம்!

அதே மாதிரி தான் இத்தனை நாள் தனுஷ் உடன் பழகிய வெற்றிமாறனுக்கு அவர் எப்படி பட்டவர் என்று அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.

தனுஷ் NOC கொடுத்தால் ராஜன் வகையறா படம் வட சென்னை சினிமாடிக் யுனிவர்ஸ் உள்ளே வரும். அப்படி இல்லை என்றால் வடசென்னை பகுதியை சுற்றி நகரும் கதைக்களமாக இருப்பது போல் தான் இந்த கதையை வெற்றிமாறன் எழுதி இருக்கிறாராம்.

இதனால் தனுஷ் எத்தனை தடை போட்டாலும் சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் ராஜன் வகையறா உறுதியாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →