அப்பா பெயரை காப்பாற்றுவாரா சூர்யா.. விஜய் சேதுபதி வாரிசின் பீனிக்ஸ் டீசர் எப்படி இருக்கு.?

Phoenix Teaser: வாரிசு நடிகர்கள் சினிமாவிற்கு ஒன்றும் புதிது கிடையாது. டாப் ஹீரோக்களின் பிள்ளைகள் அப்பா வழியில் இப்போது ஹீரோ அவதாரம் எடுத்து வருகின்றனர். அதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நாயகனாக களமிறங்கியுள்ளார்.

அனல் அரசு இயக்கத்தில் சூர்யா, வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, சம்பத் என பலர் நடித்திருக்கும் பீனிக்ஸ் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அப்பா வேற நான் வேற என ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்த சூர்யாவின் நடிப்பு இதில் எப்படி இருக்கிறது என்பதை இங்கு காண்போம்.

டீசரின் ஆரம்பத்திலேயே வில்லன் கும்பல் சிறுவர் ஜெயிலில் இருக்கும் ஒருவரை கொல்ல திட்டம் போடுவது போல் ஆரம்பிக்கிறது. அதையடுத்து ஜெயிலில் இருக்கும் ஹீரோ விலலன்களை அடித்து துவம்சம் செய்வது என காட்சிகள் பரபரப்பாக நகர்கிறது.

ஆக்ஷனில் மிரட்டும் சூர்யா

இதில் சூர்யா ஆக்ஷன் காட்சிகளுக்காக ரொம்பவும் மெனக்கெட்டுள்ளார். அதேபோல் டாப் ஹீரோவின் மகன் என்பதற்காக கொஞ்சம் அதிக பில்டப் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரிகிறது.

குத்துச்சண்டை வீரராக இருக்கும் சூர்யா அதனால் சந்திக்கும் சில அரசியல் ரீதியான பிரச்சினைகள் தான் படத்தின் கதை என யூகிக்க முடியாது. வெட்டு, குத்து, ரத்தம் என ஹீரோயிசம் அதிகமாக இருக்கும் இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் ஆக்சன், டான்ஸ் என கலக்கி இருந்தாலும் ஒரு குழந்தைத்தனமும் அவர் முகத்தில் தெரிகிறது. இருப்பினும் சூர்யா அப்பா பெயரை காப்பாற்றுவாரா என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.