Ajith, Vijay: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அஜித் மற்றும் விஜய் என்ற பெயர்களுக்கு இருக்கும் தாக்கம் விவரிக்க முடியாதது. “தல” அஜித், “தளபதி” விஜய் – இந்த இரண்டு பெயர்களும் திரையரங்குகளில் பெரும் பாக்ஸ் ஆபிஸ் புயலை ஏற்படுத்தும் சக்தி உடையவை.
பல ஆண்டுகளாக இவர்களின் படங்கள் வெளியான போதெல்லாம் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக, ஒரே நாளில் இருவரின் படங்கள் மோதும் சூழல் உருவானால், திரையரங்குகளில் சூடான போட்டி நிகழ்வது தவிர்க்க முடியாதது! அனால் அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றுதான் சந்தேகம். ஏனென்றல் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார்.
பொங்கல் நாளில் சில முக்கியமான அஜித்-விஜய் திரைப்பட மோதல்கள்:
1996: வசந்தம் (அஜித்) vs Poove Unakkaga (விஜய்) – விஜய்க்கு பெரிய வெற்றி
1999: Amarkalam (அஜித்) vs Thulladha Manamum Thullum (விஜய்) – இரு படங்களும் ஹிட்
2001: Dheena (அஜித்) vs Friends (விஜய்) – இருவருக்கும் வெற்றி
2003: Anjaneya (அஜித்) vs Thirumalai (விஜய்) – விஜய் வெற்றி
2006: Aadhi (விஜய்) vs Paramasivam (அஜித் ) – அஜித் வெற்றி
2007: Aalwar (அஜித்) vs Pokkiri (விஜய்) – விஜய்க்கு மாபெரும் ஹிட்
2014: Veeram (அஜித்) vs Jilla (விஜய்) – வீரம் ஹிட், அஜித்தின் படம் மாஸ் ஆடியன்ஸை கைப்பற்றியது
2023: Varisu (விஜய்) vs Thunivu (அஜித்) – அஜித் வெற்றி
இந்த பட்டியலில் இருந்து பார்க்கும்போது, இருவரும் பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் சாம்பியன்களாக விளங்குகின்றனர். சில ஆண்டுகளில் விஜயின் படங்கள் அதிக கமெர்ஷியல் வெற்றியை பெற்றுள்ளன, மற்றொரு பக்கம் அஜித்தின் படங்கள் தீவிர ரசிகர்களிடம் பெரும் ஹிட் படங்களாக உயர்ந்துள்ளன. இருவரின் படங்களிலும் கலவையான வெற்றியை பெற்றுள்ளன.
பிரத்யேகமாக 2014-ல் ‘வீரம்’ vs ‘ஜில்லா’ மோதல் ரசிகர்களுக்கு பொங்கல் திருவிழாவாக இருந்தது. திரையரங்குகளில் ஆரம்பத்தில் இரு படங்களும் ஹவுஸ்ஃபுல் போனது. ஆனால் வீரம் மட்டும் வெற்றி பெற்றது.
இருவரும் போட்டியை ஆரோக்கியமாகவே எடுத்துக்கொண்டு வந்தாலும், ரசிகர்களின் உற்சாகம் எப்போதும் மேலோங்கி நிற்கும். இன்றைய சினிமா மார்க்கெட்டில் அஜித்-விஜய் படங்கள் வெளியாவதற்கே பாக்ஸ் ஆபிஸ் பண்டிகையாகிறது. எதிர்காலத்தில் இவர்களின் படங்கள் மீண்டும் ஒரே நாளில் வெளிவந்தால் அது ரசிகர்களுக்கு திரையரங்க திருவிழா மாதிரியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.