அரசியல் கட்சியால் சிக்கலில் விஜய்.. விற்க முடியாத நிலையில் ஜனநாயகன்

Vijay : விஜய் கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கினர். மேலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அவரது அரசியல் பயணம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சூழலில் விஜய்யின் கடைசி படம் தான் ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை இப்போது விற்க முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அரசியல் சூழல் காரணமாக ஜனநாயகன் படம் வெளியீடு மற்றும் விளம்பரத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது விஜய் மாநாடுகளில் DMK மற்றும் BJP ஆகிய கட்சிகளை எதிர்த்து பேசி இருக்கிறார். அதோடு ஜனநாயகன் படத்தில் அரசியல் கருத்துக்களை மறைமுகமாக விஜய் பேசி உள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

விற்க முடியாத நிலையில் விஜய்யின் ஜனநாயகன்

குறிப்பாக இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றி கொண்டான் என்று வைத்துள்ளனர். இது அவரது கட்சியை குறிப்பிடும் வகையில் இருக்கிறது. இந்த பெயரே மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

மேலும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த சூழலில் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் ஜனநாயகன் படத்தை வாங்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஏனென்றால் அரசியல் கட்சியால் இந்த படத்திற்கு எதிர்ப்பு வர வாய்ப்பு இருக்கிறது. இதனால் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்ற முடிவில் பெரிய நிறுவனங்கள் ஜனநாயகன் படத்தை வாங்காமல் பின்வாங்கி விட்டனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →