Vijay : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், புதிய அரசியல் தலைவர் என தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் விஜய், சமீபத்தில் மதுரை மாநாட்டில் ஆற்றிய உரையில் ரஜினிகாந்தை சுட்டிக் கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. “நான் அரசியலுக்கு வரேன் என்று சொல்லிவிட்டு வராமல் இல்லை” என்ற விஜயின் கூற்றை, மக்கள் ரஜினியை குறிப்பிட்டதாகப் புரிந்து கொள்கிறார்கள். இதற்கு சமூக விமர்சகர் அந்தணன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்தணனின் கூர்மையான விமர்சனம்..
“விஜய், ரஜினி ஓட்டுக்களை நாடியிருந்தால், இந்தக் கருத்தைச் சொல்ல மாட்டார். அவர் திட்டமிட்டே ரஜினியை கூறியுள்ளார். இது தேவையற்ற கருத்து. இதனால் விஜய், தனது மாநாட்டை சர்ச்சைக்குரியதாக மாற்றிக் கொண்டார்,” என்று அந்தணன் தெரிவித்துள்ளார். மேலும், “விஜயின் பேச்சில் ஒரு காயம் தெரிகிறது. ரஜினியால் எங்கோ அவர் பாதிக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது. அதனால் தான் இப்படியாகச் சொல்லி இருக்கலாம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சு..
இந்த கருத்து வெளிப்பட்ட பின்னர், விஜய்-ரஜினி உறவு குறித்து மீண்டும் பேச்சு கிளம்பியுள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோதும், கடைசி நேரத்தில் விலகினார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. இதை விஜய் சுட்டிக் கூறியதால், அவர் தனது அரசியல் தன்னம்பிக்கை முயற்சியையும் காமிப்பதாக சிலர் கருதுகின்றனர்.
மறுபுறம், இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். ரஜினியின் ரசிகர்கள் வட்டாரமும் விஜயின் ரசிகர்கள் வட்டாரமும் இணையத்தில் மாறி மாறி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஜயின் மாநாடு – அரசியல் களம்..
மதுரையில் நடைபெற்ற மாநாட்டின் மூலம் விஜய் தனது அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார். கட்சியின் கொள்கைகள், இலக்குகள் குறித்து அவர் தெளிவான உரை ஆற்றியிருந்தாலும், ரஜினியை குறிக்கும் வகையில் வந்த இந்த வரிகள் அதிக கவனம் ஈர்த்துள்ளன. வளர்த்து கொடமிருக்கும் வேளையில் இந்த மாதிரி பகைமைகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
விஜயின் அரசியல் பயணம் குறித்து ரசிகர்களும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக கவனித்து வரும் நிலையில், இந்த சர்ச்சை அவருக்கு பிரபலத்தையும் சவாலையும் ஒன்றாகக் கொண்டுவந்துள்ளது என அந்தணன் அவரது கருத்தை கூறியுள்ளார்.