பெரிய பட்ஜெட்டுக்கு லாயக்கில்லாமல் போன விக்ரம்.. வீரதீர சூரன் செய்த பங்கம்

தெய்வத்திருமகள் படத்திற்குப் பிறகு விக்ரமுக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் கை கொடுக்கவில்லை. அந்த படமும் ரிலீஸ் ஆகி 12 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடாரம் கொண்டான், மகான், கோப்ரா, தங்களான் என அடுத்தது தொடர் தோல்விகளை பார்த்தவர், இப்பொழுது பெரிதும் நம்பி இருந்த படமும் கைகொடுக்கவில்லை.

சமீபத்தில் விக்ரமுக்கு வெளிவந்த படம் வீரதீர சூரன். இந்த படத்தை பெரிதும் நம்பி இருந்தார் விக்ரம். இதன் ட்ரெய்லர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. எப்படியும் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வரிசையில் நல்ல வசூல் தரும் என்று எதிர்பார்க்கையில் சரியாக கோபிக்கவில்லை.

படங்கள் ஓடாவிட்டாலும் விக்ரம் 55 கோடிகள் சம்பளத்தில் இருந்து குறைத்துக் கொள்வதாக இல்லை. வீரதீர சூரனுக்கு பிறகு இவர் மார்க்கெட் வேறு லெவலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கையில் அதுவும் கை கொடுக்கவில்லை. இதனால் இவ்வளவு சம்பளம் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

சமீபத்தில் கூட இவர் நடிப்பதாக இருந்த படம் டிராப் ஆகி உள்ளது. ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் எந்த ஒரு பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கவில்லை. இப்பொழுது இயக்குனர் மடோன் அஸ்வின் விக்ரமை வைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டு இருந்தார்.

சுமார் 300 கோடிகளில் உருவாக போகும் இந்த படம் இப்பொழுது டிராப் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது எல்லாத்துக்கும் காரணம் வீரதீரசூரன் நன்றாக போகாததால் தான். அதுவும் போக விக்ரம்மின் அதிக சம்பளமும் ஒரு காரணம் . இவ்வளவு பட்ஜெட்டுக்கு தயாரிப்பாளர்கள் யாரும் ஒத்துவரவில்லை அதனால் படம் 90% ட்ராப் வரிசையில் இருக்கிறது..

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →