விக்ரமை ஆட்டி படைக்கும் ஏழரை சனி.. திடீரென டிராப்பான படம்

Vikram : விக்ரம் ஒரு மாஸ் ஹிட் படத்தை எப்போது கொடுத்தார் என்பதை யோசிக்கும் படியாக தான் இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு படமாவது விக்ரம் கொடுத்து வந்தாலும் அதில் வெற்றி பெற்ற படங்கள் என்றால் சொற்பம் தான்.

பா ரஞ்சித்தின் தங்கலான் மற்றும் வீரதீர சூரன் படங்கள் வெற்றி பெற்றாலும் பெரிய வசூலை பெறவில்லை. ஒரு படத்திற்காக கடின உழைப்பு போட்டாலும் விக்ரமால் வெற்றி பெற முடியாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.

இந்த சூழலில் வீரதீர சூரன் படம் நடித்துக் கொண்டிருக்கும் போது மடோன் அஸ்வின் படத்தில் விக்ரம் கமிட்டானார். இவர் இதற்கு முன்னதாக மண்டேலா, மாவீரன் போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டார். இதற்கான ஸ்கிரிப்டையும் விக்ரம் தயார் செய்ய சொல்லி இருக்கிறார்.

பாதியிலேயே டிராப்பான விக்ரமின் படம்

ஆனால் இதற்கான கதையை கூறும் போது விக்ரம் மற்றும் மடோன் அஸ்வின் ஆகியோருக்கு கதையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அதோடு தயாரிப்பாளருக்கும் இந்த படத்தை எடுப்பதில் பட்ஜெட் ரீதியாக சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம்.

ஆகையால் இந்த படம் ட்ராப் ஆனதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க பல வருடங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படம் உருவானது. இந்த படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.

இவ்வாறு விக்ரமுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது. தளராமல் தன்னுடைய கடின உழைப்பை அடுத்தடுத்த படங்களில் போட்டு வருகிறார். மேலும் வீரதீர சூரன் படத்தின் பார்ட் 2 வெளியான நிலையில் முதல் பாகமாவது விக்ரமை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →