ரீ-என்ட்ரி கைகொடுக்குமா.? கவர்ச்சி மூலம் வாய்ப்பை கெட்டியாக பிடித்த லாரன்ஸ் பட நடிகை

இப்போதும்கூட ஸ்லிம்மா, சூப்பரா இருக்கும் நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் பல காலம் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக ராகவா லாரன்ஸ் உடன் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் ஒருகாலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை வேதிகா, பாலிவுட் பக்கமும் தனது கவர்ச்சியை காட்டி மார்க்கெட்டை பிடித்தார்.

அதன்பிறகு தமிழில் முனி படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக கோலிவுட்டிலும் பிரபலமானார். பின் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவுடன் காளை, சித்தார்த்துடன் காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழின் உச்சத்திற்கே சென்றார்.

இப்படி தமிழில் மற்ற நடிகைகளுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்து கொண்டிருந்த வேதிகாவுக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் இவர் நடித்த ராகவா லாரன்ஸின் பேய் படமான காஞ்சனா 3 சூப்பர் ஹிட் அடித்தது.

அந்த படத்தில் படு கிளாமராக நடித்திருந்த வேதிகா, இப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்தி நான்கு படங்களில் நடித்து வருகிறாராம். தமிழ் சினிமாவின் வேதிகா ரீ என்ட்ரி ஆகி இருப்பது கைகொடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேசமயம் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் வேதிகா அவ்வப்போது தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களையும் ஸ்விம்மிங் சூப் புகைப்படங்களையும் வெளியிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மட்டும் 3.5 மில்லியன் ரசிகர்களை பின்தொடர செய்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய ரீ என்ட்ரியை ரசிகர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அவருடைய நடிப்பில் வெளியாகும் அடுத்தடுத்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →