கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரவி மோகன் புதிதாய் தொடங்கி இருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. ரவி மோகனின் நல விரும்பிகள் பல பேர் அதில் பங்கு பெற்றனர். நிகழ்ச்சிக்கு சிவராஜ் குமார் முதல் சிவகார்த்திகேயன் வரை அனைவரும் வந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக வி ஜே பாவனா சிறப்புரையாற்றி வந்தார். சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது நிகழ்ச்சி. ஜெனிலியா அவருடைய கணவர் முகேஷ் உடன் வந்திருந்தார். இருவரும் மேடையில் ரவி மோகனுடன் ஜாலியாக பேசிக்கொண்டனர்.
மேடையில் பேச வந்த யோகி பாபுவிடம் தொகுப்பாளினி பாவனா ஏடாகூடமான கேள்வி ஒன்றை கேட்டார். யோகி பாபுவிடம் இந்த திறப்பு விழா பற்றி உங்கள் மனதிற்குள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர் என்னை வைத்து படம் தயாரிக்க போகிறார்.
ரவி மோகன் ஸ்டுடியோவில் நான் நடிக்கும் படம் வெற்றி பெற வேண்டும். இன்னும் அவர் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் இதுதான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என பாவனாவிடம் கூறினார் யோகி பாபு. ஆனால் மறுக்கணமே உண்மையாய் இதைத்தான் நினைத்தீர்களா என கேட்டு அதிர வைத்தார்.
உங்களை மாதிரி நான் இல்லை நீங்கள் தான் அப்படி நினைப்பீர்கள் என யோகி பாபு பதிலடி கொடுத்தார். ஏற்கனவே இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒன்றாய் பணியாற்றியவர்கள். ஆனால் யோகி பாபு இன்று ஆலமரம் போர் வளர்ந்து விட்டார். இதை மனதில் வைத்து பாவனா இப்படி கேட்டாரா என்பது தெரியவில்லை.