ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கடந்தகால வெற்றியை மதிக்காத சினிமா.. முருகதாசுக்கு ஏற்பட்ட அவல நிலை!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களை வைத்து பல மிரட்டல் படங்களை கொடுத்தவர் பான் இந்தியா இயக்குனரான ஏஆர் முருகதாஸ். ஆனாலும் இப்பொழுது சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறார் என்றே கூறலாம். இவரை தமிழ் சினிமா பல இடங்களில் ஏமாற்றி உள்ளது.

இவர் இயக்கிய சர்க்கார் படம் சற்று பிரச்சினையை சந்தித்தது. இந்தப்படத்தில் முருகதாஸ் அரசியலை கையில் எடுத்ததால் அதில் ஒரு சில பிரச்சினைகளை சந்தித்தது மட்டுமல்லாமல் கதை திருட்டு என பல இடங்களில் இவரை போட்டு உதைத்தது.

இவர் இப்பொழுது ஜூராசிக் பார்க், தி லயன் கிங் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் குரங்கை வைத்து ஒரு படம் எடுக்கும் வேலையில் ஆயத்தமாகி, அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் அவர் அந்த படத்தை எடுக்கப்போகிறாராம்.

அதுமட்டுமின்றி இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக பட்ஜெட்டில் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இவரின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்றால், தமிழ் ஹீரோக்கள் இவர் இயக்குகிற படத்தில் நடிப்பதற்கு சற்று யோசிக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

ஏனென்றால் இவர் சந்தித்த பிரச்சனைகள் பல. அதனால் நம் படத்திற்கு பிரச்சனை வந்துவிடும் என்று முன்னணி ஹீரோக்கள் இவரை கண்டால் விலகிக் கொள்கின்றனர். இவர் பல வெற்றிகளை கொடுத்தாலும் தற்போது இவர் சினிமாவில் உள்ள நிலையை மனதில் வைத்தே, ஹீரோக்கள் ஏஆர் முருகதாஸ் உடைய படத்தில் நடிப்பதற்கு தயங்குகின்றனர்.

இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிய தர்பார் படம் சரியாக போகவில்லை. இப்போது தெலுங்கில் படம் இயக்குவதற்காக பல ஹீரோக்கள் இடம் பேசி வருகிறார். குறிப்பாக தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி அவர்களை கதாநாயகனாக வைத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இரு மொழிகளில் உருவாக்க போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Trending News