சீரியலில் இப்போது பிரபல வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஒருவர் ஆரம்பத்தில் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக பல நிறுவனங்கள் ஏறி இறங்கி உள்ளார். ஆனால் பல இடங்களில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகை சினிமா மீது உள்ள ஆசையை சரியாக பிரபல இயக்குனர் ஒருவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதாவது தன்னுடைய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என்று ஆசை காட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்துள்ளார். எல்லோருக்கும் பரிச்சயமானவர், பிரபல இயக்குனர் என்பதால் பொய் சொல்ல மாட்டார் என நடிகையின் அட்ஜஸ்ட்மென்ட் செய்து உள்ளார்.
ஆனால் கடைசியில் இயக்குனர் நடிகையை நம்ப வைத்து ஏமாற்றி உள்ளார். அப்போது பிரபலமான நடிகையை தனது படத்தில் கதாநாயகியாக போட்டு, இவரை அந்த நடிகையின் தோழியாக நடிக்கவிட்டார். இதை நினைத்து அசிங்கப்பட்டு வெறுத்துப் போன அந்த நடிகை இனிமேல் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டேன் என்ற முடிவு எடுத்தார்.
மேலும் கதாநாயகிக்கு தோழியாக நடித்ததால் அதன் பின்பு அவருக்கு கதாநாயகி வாய்ப்பே வரவில்லையாம். இதைத் தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் நடிக்க தொடங்கினார். இதன் மூலம் அவருக்கு வருமானமும் நிறைய கிடைக்க தொடங்கியது.
அதன் பின்பு சீரியலில் இறங்கி அங்கும் ஒரு கை பார்க்க தொடங்கினார். மேலும் சீரியலில் முக்கிய நடிகையாக வெற்றி பெற்றார். அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமலே இந்த அளவுக்கு வளர்ந்து உள்ள நடிகை இப்போது சீரியல்களையும் தயாரித்து வருகிறாராம்.
ஒரு தடவை அட்ஜஸ்ட்மென்ட் செய்து ஏமாற்றம் அடைந்ததால் மீண்டும் இந்த தவறை செய்யவே கூடாது என்பதில் நடிகை உறுதியாக இருந்து சினிமாவில் மட்டுமின்றி சீரியலிலும் ஜெயித்து காட்டி இருந்தார். மேலும் இவருக்காகவே சீரியலை பார்க்க பல ரசிகர்கள் வந்த வரலாறு உண்டு.