வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோ தலையில் மிளகாய் அரைத்த மனைவி.. வில்லன் நடிகருடன் காட்டும் நெருக்கம்

மாஸ் ஹீரோவின் மனைவி வில்லன் நடிகருடன் நெருக்கமாக பழகி வருவது தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் நடித்ததால் ஹீரோக்களுக்கு பெண் கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான ஹீரோக்கள் தங்களுடன் நடிக்கும் சகநடிகைகளையே காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் பிரபல ஹீரோ ஒருவர் சினிமா பின்புலம் இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஒற்றுமையாக இருந்த இவர்களது குடும்பத்தில் இப்போது குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது தன்னுடைய படப்பிடிப்பு தளத்திற்கும் ஹீரோ மனைவியை அழைத்து சென்றிருக்கிறார்.

அப்போது அந்தப் படத்தில் நடித்த வில்லன் நடிகருடன் மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஹீரோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இருவரும் நட்பாகத்தான் பழகி வருகிறார்கள் என்று நினைத்திருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஹீரோவின் தலையில் மிளகாய் அரைத்து விட்டு மனைவி வில்லன் நடிகருடன் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

அதோடு ஒரு நாள் கையும் களவுமாக ஹீரோவின் பார்வையில் சிக்கி விட்டனர். இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் மனைவி வில்லன் நடிகரிடம் பிரச்சனையை சொல்லி உள்ளார். அவருக்கு குடும்பம் கூட்டி என்று இருப்பதால் புருஷன் பேச்சைக் கேளு என்று சொல்லிவிட்டு கழட்டி விட்டுள்ளார்.

மேலும் ஹீரோ மனைவி மீது மிகுந்த கோபத்தில் இருப்பதால் இப்போது அவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டாராம். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக வில்லன் நடிகரை நம்பி இப்போது ஹீரோவின் மனைவி வாழ்க்கை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.

Also Read : இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

Trending News